உங்களிடம் எத்தனை சிம் கார்டு உள்ளது? இதை செய்ய தவறினால் இத்தனை லட்சம் அபராதம் கன்பார்ம்!!
நம் நாடு டிஜிட்டல் தொழிநுட்பத்தில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.மொபைல் என்றால் என்னவென்று தெரியாத நபர்கள் கூட இன்று ஆன்லைன் பரிவர்த்தனையை சுலபமாக செய்து வருகின்றனர்.
ஒருபுறம் அசுர வளர்ச்சி என்றால் மறுபுறம் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஆன்லைன் பண மோசடியால் இன்று லட்சக்காண பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.ஒருவரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி சிம் கார்டு பெற்று மோசடி செயல்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க தங்கள் ஆதார் எண்ணில் எத்தனை மொபைல் நம்பர் உள்ளது என்று அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்நிலையில் ஒருவர் தங்கள் ஆதார் அட்டை பயன்படுத்தி அதிகபட்சம் 9 சிம் கார்டுகள் மட்டுமே பெற முடியும் என்று மத்திய அரசு புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்திருக்கிறது.அதாவது ஒரு நபரிடம் அதிகபட்சம் 9 சிம் கார்டுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று உச்ச வரம்பு ஒன்றை மத்திய அரசு நிர்ணயித்திருக்கிறது.
இந்நிலையில் உங்கள் ஆதார் எண் பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது என்று கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி அறிந்து கொள்ள முடியும்.
படி 01:
முதலில் https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ என்கிற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
படி 02:
உள் நுழைந்ததும் “Know your mobile connection” என்பதைக் கிளிக் செய்து உங்களுடைய மொபைல் எண் மற்றும் கேப்ட்ச்சா குறியீட்டை என்டர் செய்யவும்.இவ்வாறு செய்த உடன் தங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்படும்.அதை என்டர் செய்யவும்.
படி 03:
இவ்வாறு செய்த உடன் உங்கள் ஆதார் எண்ணுடன் தொடர்புடைய அனைத்து மொபைல் எண்களும் ஷோ ஆகும்.பிறகு “Not my number”,”Not required” மற்றும் “Required” என்று மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.தங்களுக்கு தெரியாத மொபைல் எண் இருந்தால் “Not my number” என்ற என்பதை கிளிக் செய்யவும்.தாங்கள் பயன்படுத்த மொபைல் எண் இருந்தால் “Not required” என்பதைக் கிளிக் செய்து அதனை பிளாக் செய்துவிடவும்.