ரூ 1000 மட்டும் முதலீடு செய்யுங்கள்.. 21 லட்சம் வரை கிடைக்கும்!! நோ ரிஸ்க் காசு மழையே கொட்டும்!!
எதிர்கால வாழ்க்கையில் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க கூடாது என்றால் இப்பொழுதே பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்குங்கள்.உங்களில் பலர் வருமானத்தில் மூன்று ஒரு பங்கை முதலீடு செய்து வருவீர்கள்.சிலர் தங்கள் வருமான வரியை குறைக்க வரிச்சலுகை வழங்கக் கூடிய திட்டங்களில் முதலீடு செய்வார்கள்.
இவ்வாறு வரிச்சலுகை குறைக்க நினைப்பவர்கள் போஸ்ட் ஆபிஸில் உள்ள தேசிய சேமிப்பு பத்திரம் என்ற திட்டத்தில் முதலீடு செய்யலாம்.இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.வருமான வரிச்சட்டம் 1961 என்ற பிரிவில் 80c-இன் கீழ் வரிச்சலுகைகள் வழங்கப்படுகிறது.தற்பொழுது இந்த திட்டத்திற்கு 7.7% வட்டி வழங்கப்படுகிறது.
இந்திய குடிமகன்கள் மட்டுமே இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ.1000 என்று உள்ளதால் சிறு மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு இவை சிறந்த முதலீடாக விளங்குகிறது.இந்த திட்டத்திற்கான அதிகபட்ச தொகை வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.
தனி நபர்,இரண்டு அல்லது மூன்று பேர் இணைந்து இந்த திட்டத்தில் முதலீடு ;செய்யலாம்.10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெயரில் அவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்த திட்டத்தை தொடங்கலாம்.
இந்த திட்டத்தில் ரூ.15,00,000 முதலீடு செய்கிறீர்கள் என்றால் 5 ஆண்டுகளுக்கு பிறகு 7.7% வட்டியுடன் சேர்த்து ரூ.21,73,551 ரூபாய் முதிர்வு தொகை கிடைக்கும்.எனவே தங்களுக்கு அருகில் இருக்கின்ற போஸ்ட் ஆபிஸிற்கு சென்று NSC கணக்கு திறந்து முதலீடு செய்யுங்கள்.
தேவைப்படும் ஆவணங்கள்:
1)ஆதார் கார்டு
2)பான் கார்டு
3)ஓட்டர் ஐடி
4)ரேசன் கார்டு
5)பாஸ்போர்ட் சைஸ் போட்டோ