கடுப்பில் உதயநிதி.. துணை முதல்வர் பதவி இப்போதைக்கு இல்லை!! அப்செட்டில் ஸ்டாலின்!!

Photo of author

By Rupa

கடுப்பில் உதயநிதி.. துணை முதல்வர் பதவி இப்போதைக்கு இல்லை!! அப்செட்டில் ஸ்டாலின்!!

திமுக என்றாலே வாரிசு அரசியல் நடத்துவது தான் என்ற குற்றச்சாட்டு அனைவர் மத்தியிலும் உள்ளது. கட்சிக்காக பல ஆண்டு காலம் உழைத்தாலும் அவர்களுக்கு எல்லை கோடு ஒன்றை போட்டு விடுகின்றனர். தனது மகன் கட்சிக்குள் வரமாட்டான் என்று கூறிய முதல்வரே தற்பொழுது அமைச்சராக்கி அழகு பார்த்து வருகிறார். அதேபோல எப்பொழுது நேரம் கிடைக்கும் அவரை துணை முதல்வர் பதவியில் அமர்த்தலாம் என்று எண்ணியும் வருகிறார்.

சமீபத்தில் முதல்வர் தொழில் ரீதியாக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அவர் வரும்வரை அனைத்து பணிகளையும் துணை முதல்வர் பதவியில் உதயநிதி அமர்த்தப்பட்டு பார்க்கப்படுவார் என்ற திட்டத்தை கையில் வைத்திருந்தார். ஆனால் இதனிடையே கள்ளக்குறிச்சி விவகாரம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு என அடுத்தடுத்து திமுகவிற்கு அழுத்தம் கொடுக்கும் பல அசம்பாவிதங்கள் நடந்து விட்டது.

இந்த சமயத்தில் தங்களின் சுய இன்பத்திற்காக இவ்வாறு பதவிகள் அமர்த்தபட்டால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டு விடும் என்பதால் அதனை ஒத்தி வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி திமுக அமைச்சர்களையும் பாஜக மேலிடம் குறி வைத்து வருகிறது. செந்தில் பாலாஜி வழக்கே தற்பொழுது வரை முடியாத பட்சத்தில் அடுத்தடுத்துள்ள மூத்த அதிகாரிகள் மேலிடம் கையில் சிக்கினால் வெளியே வர இயலாது. இதனால் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொழில்துறை ரீதியாக அமெரிக்கா செல்ல உள்ள ஸ்டாலினின் பயணம் சற்று தள்ளிப் போட இருப்பதாக கூறுகின்றனர். அந்த வகையில் உதயநிதியின் துணை முதல்வர் பதவியும் தள்ளி போடப்படும். இதனின் முதல் ஆயத்த பணியாக கள்ளக்குறிச்சி விவகாரம் ஆம்ஸ்ட்ராங் படுகொலை உள்ளிட்டவற்றில் ஐஏஎஸ் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக அமைச்சரவையில் மாற்றம் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அடுத்தடுத்து நடக்க திட்டமிட்டு உள்ளாராம்.