அல்சர் நோயால் வயிறு வலி தாங்க முடியவில்லையா? அப்போ நெல்லிக்காய் ஜூஸை இப்படி செஞ்சு குடிங்க!
அல்சர் என்பது வயிற்றில் புண் ஏற்படுவதால் ஏற்படும் ஒரு வகை நோய் ஆகும். இது எதனால் ஏற்படுகின்றது என்றால் நாம் அனைவரும் சரியாக சாப்பிடாமல் இருக்கும் பொழுது வயிற்றில் புண் ஏற்பட்டு இந்த அல்சர் ஏற்படுகின்றது.
இதனால் நமக்கு கடுமையாக வயிற்று வலி ஏற்படும். வயிற்று எரிச்சல் ஏற்படும். இதை சரி செய்ய பல வகையான ஆங்கில மருந்துகள் இருக்கின்றது. அதை எடுத்துக் கொண்டால் மீண்டும் மீண்டும் மருந்துகள் சாப்பிட வேண்டி இருக்கும். எனவே இயற்கையான முறையில் அல்சர் நோயை எவ்வாறு குணப்படுத்துவது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* நெல்லிக்காய்
* தயிர்
செய்முறை…
முதலில் நெல்லிக்காயை விதை இல்லாமல் எடுத்து மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
பின்னர் ஒரு டம்ளரில் தயிர் சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் ஜூசை தயிரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்கு கலந்து விட்டு அப்படியே குடிக்கலாம். இதை தொடர்ந்து செய்து வரும்பொழுது அல்சர் நோய் குணமாகும்.