உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்க வேண்டுமா? எலுமிச்சம் பழத்தை இப்படி பயன்படுத்துங்க!
நம்முடைய உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க நாம் எலுமிச்சம் பழத்தை பயன்படுத்தலாம். எலுமிச்சம் பழம் நம்முடைய சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றது. எலுமிச்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடலில் உள்ள தோல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகின்றது.
இந்த எலுமிச்சம் பழத்தை நம்முடைய உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்க பயன்படுத்தலாம். அதை எவ்வாறு செய்வது என்பது குறித்து தற்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை எலுமிச்சம் பழத்தை வைத்தும் நீக்கும் முறை…
முதலில் இரண்டு எலுமிச்சம் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நாம் குளிக்க வேண்டிய தண்ணீரில் போட்டுக் கொள்ளவும். சிறிது நேரம் கழிந்து குளிக்கலாம். இவ்வாறு குளித்து வந்தால் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்கலாம்.
எலுமிச்சம் பழத்தின் மற்ற நன்மைகள்…
* எலுமிச்சம் பழத்தை நாம் ஜூஸ் செய்து குடித்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
* எலுமிச்சம் பழத்தின் சாறு நமக்கு ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்துகின்றது.
* உடல் எடையை குறைப்பதில் எலுமிச்சம் பழம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
* எலுமிச்சம் பழத்தை நாம் உணவில் சேர்த்து வந்தால் கல்லீரல் வலிமையாகின்றது
* எலுமிச்சம் பழத்தை நாம் எடுத்து வந்தால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.