பெண்கள் அழுக்கு தாலிக்கயிறு மாற்றுவதற்கான விதிமுறைகள்

0
1518
Instructions to Change Thali-News4 Tamil Online Tamil News
Instructions to Change Thali-News4 Tamil Online Tamil News

திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகிய பின்னரோ, அல்லது மாங்கல்யம் பழுதடைந்தால் புது மாங்கல்யம் அணிவதற்காகவோ தாலிக் கயிற்றை மாற்றுவார்கள். அவ்வாறு அவர்கள் அணிந்துள்ள தாலிக்கயிற்றை மாற்ற சில விதிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து அதன்படியே பெண்கள் தாலிக்கயிற்றை மாற்ற வேண்டும்.

திருமணமாகிய பெண்கள் தாங்கள் அணிந்துள்ள தாலிக்கயிறானது அழுக்காகிய பின்னரோ அல்லது பழுதடைந்த மாங்கல்யத்தை மாற்றி புதியதாக அணிய பழுதாகிய பின்னரோ அதை மாற்றி புது மாங்கல்யம் அணிந்தால், அதை வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை மாற்றுவது உகந்ததாகும்.

இதை காலை உணவு சாப்பிடும் முன்னரே, அருகிலுள்ள ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சென்று, அதன் நடைபாதையில் அமராமல், எதாவது ஒரு ஓரமாக கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து மாற்றிகொள்வது மிகவும் நன்மை பயக்கும்.

மேலும் பெண்கள் தாங்கள் அணியும் புதிய மாங்கல்ய கயிற்றில் ஊக்கு மற்றும் சாவி உள்ளிட்ட பொருட்களை எக்காரணம் கொண்டும் தொங்க விடக்கூடாது. மேலும் மாலை நேரத்திலும், ராகு மற்றும் எமகண்ட காலத்திலும் தாலிக்கயிற்றை மாற்றக்கூடாது.

திருமணமாகிய பெண்கள் அழுக்காகிய நிலையிலிருக்கும் கயிற்றில் தாலியை அணிந்திருந்தால் அவர்களுக்கு வறுமை அதிகமாகும். எனவே, திருமணமான பெண்கள் அனைவரும் அவ்வப்போது தாலிக்கயிறை அழுக்காகிய உடனே வேறு ஒன்றை முறையாக மாற்றிக் கொள்ளுங்கள்.

இவ்வாறு முறைப்படி விதிமுறைகளை கடைபிடித்து செய்வதால், தாலி கட்டிய கணவரும் மற்றும் தாலி மாற்றிக் கொள்ளும் பெண்ணும் நீண்ட ஆயுளுடன் சுகமாக வாழ்வார்கள் என்பது ஆன்மீகவாதிகளின் நம்பிக்கையாகும்.

Previous articleதிருமணத்திற்கு வற்புறுத்தி மாணவி மீது தாக்குதல்! தொடரும் விசிக கட்சியினரின் நாடக காதல் அட்டூழியம்
Next articleபிற மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை! அதிரடி உத்தரவு!