பிரபல நடிகரின் மகள் 21 வயதில் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்! 

0
931
Famous actor's daughter dies at the age of 21! The film industry plunged into tragedy!
Famous actor's daughter dies at the age of 21! The film industry plunged into tragedy!
பிரபல நடிகரின் மகள் 21 வயதில் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!
பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான கிரிஷன் குமார் அவர்களின் மகள் திஷா குமார் அவர்கள் 21 வயதில் மரணமடைந்துள்ளார். இவருடைய இறப்பு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான கிரிஷன் குமார் அவர்கள் 1993 ஆஜா மேரி ஜான் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் நடிகர் கிரிஷன் குமார் 1995ம் ஆண்டு வெளியான பேவபா சனம் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார். அதன் பின்னர் சில திரைப்படங்களில் நடித்த நடிகர் கிரிஷன் குமார் திரைப்படங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
நடிகர் கிரிஷன் குமார் அவர்கள் லக்கி நோ டைம் பார் லவ், டார்லிங், ரெடி, சத்யமேவ ஜெயதே, சத்யமேவ ஜெயதே 2 என்று தொடர்ந்து பல திரைப்படங்களை தயாரித்தார். மேலும் நடிகர் பிரகாஷ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தையும் மற்ற தயாரிப்பாளர்களுடன் இணைந்து தயாரித்தார்.
இவருக்கு 21 வயதில் திஷா குமார் என்ற மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் மகள் திஷா குமார் அவர்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. திஷா குமார் அவர்கள் பல ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திஷா குமார் அவர்கள் நேற்று(ஜூலை18) உயிரிழந்தார். இவருடைய இறப்பு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் மகள் திஷா குமார் இறப்பு குறித்து நடிகர் கிரிஷன் குமார் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் “என்னுடைய மகள் திஷா குமார் அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு நீண்ட ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். மகளை இழந்து வாடும் எங்கள் குடும்பத்தின் தனியுரிமைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Previous articleவிஜய் மற்றும் சீமான் கட்சிக்கு செல்கிறார்கள் இளைஞர்கள்! கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டி! 
Next articleஇனி யாரும் ரேஷன் கடைக்கு போக வேண்டாம்.. வீட்டிற்கே வரும் பொருட்கள்!! அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!!