ஆம்ஸ்ட்ராங்கின் வலது கை.. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக நியமனம்!! புதிய பொறுப்பில் ஆம்ஸ்ட்ராங் மனைவி!!

0
595
Bahujan Samaj Party Chief Appointed!! Armstrong's wife in a new role!!
Bahujan Samaj Party Chief Appointed!! Armstrong's wife in a new role!!

 

 

ஆம்ஸ்ட்ராங்கின் வலது கை.. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக நியமனம்!! புதிய பொறுப்பில் ஆம்ஸ்ட்ராங் மனைவி!!

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்து ஐந்தாம் தேதி பழிவாங்கும் நோக்கில் வெட்டி வீழ்த்தப்பட்டார். இவர் உயிரிழந்ததையடுத்து அக்கட்சியின்அடுத்த தலைவர் யாராக இருக்கும் என்று பலரிடமும் பெரும் கேள்வி இருந்தது. குறிப்பாக பா ரஞ்சித் தான் அடுத்த தலைவராக இருப்பாரென்றும் குறிப்பாக சினிமா வட்டாரங்களிலும் இதற்கு பெரும் ஆதரவு திரண்டது. மேற்கொண்டு ஆம்ஸ்ட்ராங் மனைவி இந்த தலைமை பதவிக்கு வரலாம் என்றும் பேச்சு அடிபட்டது.

அந்த வகையில் இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. அதில் கட்சியின் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சினிமா வட்டாரத்தில் மிகவும் பிரபலமான வழக்கறிஞர் தான். நடன இயக்குனர் பிரபு என தொடங்கி பிரசாந்த் உள்ளிட்டவர்கள் வரை விவாகரத்து வாங்க அவர்களின் வாழ்க்கை நடத்தியவர். அதேபோல சுயமரியாதை திருமணத்தை ஆதரித்து அதற்கு உரிமை பெற்றுக் கொடுத்ததும் இவர்தான்.

அதுமட்டுமின்றி ஆம்ஸ்ட்ராங் மீது பல பொய் குற்றச்சாட்டு வழக்குகள் போடப்பட்ட நிலையில் அதிலிருந்து அவரை மீட்டு வெளியே கொண்டு வர உதவியாக இருந்தவர். தற்பொழுது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleஎல்லாம் கலையுது.. மா செயலாளர்கள் பொறுப்புக்கு வரும் ஆப்பு!! புதிய நிர்வாகிகளை இறக்கும் ஸ்டாலின்!!
Next articleமதுவுக்கு நான் அடிமை.. முழு காரணம் என் கணவர் மாமியார்!! குடிக்க சொல்லி டார்ச்சர் பண்ணுவாங்க – மனம் திறந்த நடிகை!!