இதை செய்தால் இனி உட்கார்ந்த இடத்திலேயே உடனடியாக கட்டட அனுமதி கிடைக்கும்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!
நம் தமிழகநாட்டில் கட்டிடம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கான அனுமதியை நகர ஊரமைப்பு இயக்ககம்(டிடிசிபி) மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்(சிஎம்டிஏ) வழங்கி வருகின்றன.இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்ற பட்ஜெட்டில் கூட்டத்தொடரில் 2,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு கட்டிட அனுமதி பெற தேவையில்லை என்றும் இதர கட்டட அனுமதி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதியை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கட்டிட அனுமதிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் நடைமுறை ஊராட்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி உடனடியாக வழங்கப்படும் திட்டம் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.இனி கட்டட அனுமதி பெற www.onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடியாக கட்டட அனுமதி வழங்கப்படும்.இதனால் கட்டட அனுமதி பெற இனி எந்த அலுவலகத்திற்கும் செல்லத் தேவையில்லை.அது மட்டுமின்றி கட்டிட பணிகள் முடிந்ததும் முடிவு சான்று பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.இது 2,500 சதுரஅடி முதல் 3,500 சதுரஅடியில் கட்டப்படும் வீடுகளுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.