இன்ஜினியரிங் படிப்புகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

0
191
How to Apply Online for Engineering Courses? Here are the full details!

தமிழகத்தில் கடந்த மே 06 அன்று மாநில பாடத்திட்டத்தின் கீழ் +2 பயின்ற மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியது.இதனை தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பமும் தொடங்கியது.பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பத்தை http:/www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்,அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள்,சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான B.E,B.Tech பட்டப்படிப்பில் சேர அரசின் இணையதளம் மூலம் எவ்வாறு விண்ணப்ப்பது என்பது குறித்து மாணவர்கள் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாணவர்கள் https://www.tneaonline.org (or) https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பம் செய்யலாம்.இல்லையேல் பொறியியல் சேர்க்கை சேவை மையம் TNEA Facilitation Centers வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.விண்ணப்பத்திற்கான பதிவுக் கட்டணத்தை Debit Card /Credit Card/Net Banking/UPI மூலம் செலுத்தலாம்.

OC,BC,BCM,MBC&DNC பிரிவினருக்கான பதிவுக்கட்டணம் ரூ.500 மற்றும் SC,SCA,ST பிரிவினருக்கான பதிவுக்கட்டணம் ரூ.200 ஆகும்.தமிழகத்தில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் தேவையில்லை.தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் கட்டாயம் பிறப்பு சான்றிதழை டிஜிட்டல் வடிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

TNEA விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்:-

1)10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

2)12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

3)சாதி சான்றிதழ்

4)ஆதார் அட்டை

5)அடையாள சான்று

6)வருமானச் சான்றிதழ்

7)மின்னஞ்சல் முகவரி

8)தொலைபேசி எண்

9)EMIS நம்பர்

10)8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற பள்ளி விவரம்

Previous articleஇதை செய்தால் இனி உட்கார்ந்த இடத்திலேயே உடனடியாக கட்டட அனுமதி கிடைக்கும்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!
Next articleஇந்த பார்ம் மட்டும் பில் பண்ணுங்க உங்களது PF பணத்தை உடனடியாக எடுக்கலாம்!!