நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்க வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!! இனி ஹேர் டை வாங்க தேவையில்லை!!

0
279
How to Use Onion to Darken Gray Hair Permanently!! No need to buy hair dye anymore!!
How to Use Onion to Darken Gray Hair Permanently!! No need to buy hair dye anymore!!

நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்க வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!! இனி ஹேர் டை வாங்க தேவையில்லை!!

இளம் வயதிலேயே தலையில் வெள்ளை முடி தென்பட்டு விட்டது என்று வருத்தம் கொள்பவர்கள் இந்த நேச்சுரல் ஹேர் டை பயன்படுத்தினால் தலைமுடி நிரந்தரமாக கருமையாகும்.

1)வெந்தயம்
2)வெங்காயம்

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை கருமையாகும் வரை வறுத்து ஆறவிட்டு பொடியாக்கி கொள்ளவும்.பிறகு நான்கு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

இந்த சாற்றில் அரைத்த வெந்தயப் பொடி சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு மிக்ஸ் செய்து தலை முழுவதும் அப்ளை செய்து வந்தால் வெள்ளை முடி அடர் கருமையாக மாறும்.

1)மருதாணி இலை பொடி
2)துளசி இலை பொடி
3)உலர் நெல்லிக்காய் பொடி

ஒரு தேக்கரண்டி மருதாணி இலை பொடி,ஒரு தேக்கரண்டி துளசி இலை பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி உலர் நெல்லிக்காய் பொடியை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாகி கொள்ளவும்.

இதை தலைக்கு அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் ஷாம்பு எதுவும் அப்ளை செய்யாமல் தலையை அலசி வந்தால் வெள்ளை முடி கருமையாக மாறும்.

1)கருஞ்சீரகம்
2)கறிவேப்பிலை
3)அவுரி இலை பொடி
3)எலுமிச்சை சாறு

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம்,ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து குறைவான தீயில் வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை நன்கு ஆறவிட்டு அரைக்கவும்.இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி அவுரிப் பொடி மற்றும் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து நன்றாக கலக்கி ஒரு இரவு ஊறவிடவும்.

மறுநாள் இந்த ஹேர் டையை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் நரைமுடி முழுமையாக கருமையாகும்.

Previous articleஎன்னங்க ஒரே நெஞ்செரிச்சலா இருக்கா? ஜஸ்ட் 4 துளசி இலைகளை இப்படி பயன்படுத்தினால் ரிலீஃப் கிடைக்கும்!
Next articleகர்ப்பிணி பெண்கள் வாயுத் தொல்லையிலிருந்து விடுபட இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!