கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலிலுள்ள நிலையில், தற்போது நடைமுறையிலுள்ள ஐந்தாவது பொது முடக்கத்தில் Unlock 1.0 எனும் பெயரில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.
அதன் படி இன்று (ஜூன் 8) முதல் உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதற்க்கு பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இதற்கான வழிகாட்டுதல் நிபந்தைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
- அந்த நிபந்தனைகள் கீழ் வருமாறு:
- உணவகங்களில் உடல் வெப்ப பரிசோதனை செய்து வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்ப வேண்டும்.
- இருமல், சளி, காய்ச்சல் இருப்பவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது,
- உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் பாதியளவு அதாவது 50 சதவீதம் இருக்கைகள் மட்டும் வாடிக்கையாளர்களை அமர அனுமதிக்க வேண்டும்.
- ஒவ்வொரு இருக்கைக்கும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் அமர வேண்டும்.
- குளிர் சாதன வசதியை பயன்படுத்தாமல் காற்றோட்டத்துக்கான அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைக்க வேண்டும் எ
- அனைத்து மேஜைகளிலும் சானிடைசர் வைத்துக் கொள்ளவேண்டும்.
- கழிவறைகளை நாளொன்றுக்கு 5 முறை சுத்தம் செய்யப்பட வேண்டும்.
- தரை, அலமாரிகள், சமையல் அறை, லிப்ட் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
- உணவை கையாள்வோர், கைக்கடிகாரம், நகைகளை அணியக்கூடாது.
- காய்கறி, அரிசி, பருப்பு போன்றவற்றை கழுவி உபயோகப்படுத்த வேண்டும்.
- கொரோனா தடுப்பு விளம்பரங்கள் உணவக நுழைவு வாயிலில் வைக்க வேண்டும்.
இவ்வாறு அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இன்று முதல் தேநீர் கடைகளிலும் 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து அருந்துவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.