முதல்வர் கைக்கு சென்ற ஆடியோ.. வசமாக சிக்கிய அமைச்சர்!! பதவியில் வரும் அதிரடி மாற்றம்!!

0
805
The audio that went into the hands of the Chief Minister. A dramatic change in office!!
The audio that went into the hands of the Chief Minister. A dramatic change in office!!

முதல்வர் கைக்கு சென்ற ஆடியோ.. வசமாக சிக்கிய அமைச்சர்!! பதவியில் வரும் அதிரடி மாற்றம்!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல்துறையில் உயர் பெண் அதிகாரிகளை அவதூறாக பேசியது குறித்து சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு அவர் வீடு மற்றும் தங்கி இருந்த அறை உள்ளிட்டவைகளில் சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் அவர் மீது போதை பொருள் மற்றும் அவதூறு வழக்கு போடப்பட்டது. கடந்த சில மாதங்களாக திமுகவை குறி வைத்தும் கட்சிக்குள் நடக்கும் மோதல்கள் குறித்து வெளிப்படையாகவே சமூக வலைத்தளத்தில் குறிப்பாக பேட்டி கொடுக்கும் வேலையில் பேசி வந்தார்.

இதனை நோட்டமிட்ட ஆளும் கட்சி இவருக்கு எப்படி இந்த தகவல் கிடைக்கிறது என்பது அறியாமல் இருந்தனர். பின்பு இந்த அவதூறாக பேசிய வழக்கை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். மேற்கொண்டு இவர் அலுவலகம் விடுதி உள்ளிட்டவற்றை சோதனை செய்வதில் முக்கிய ஆவணங்கள் போலீசாரின் கைக்கு சென்றுள்ளது. அதிலும் குறிப்பாக இரு தினங்களுக்கு முன்பு எஸ் பி லாவண்யா அவர்கள் சவுக்கு சங்கரிடம் தங்கள் துறையில் நடப்பதை பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார்.

இந்த ஆடியோ தற்பொழுது வரை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இதேபோல திமுக அமைச்சர் ஒருவர் சவுக்கு சங்கரிடம் பேசிய ஆடியோவும் சிக்கி உள்ளதாம். இது தற்பொழுது அறிவாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கொண்டு அந்த அமைச்சர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். அவரது பதவியை பறிக்க கூட தயங்க மாட்டார் என அரசியல் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

Previous articleஎங்களுடைய வாக்குறுதிகளை காப்பி அடித்து விட்டார்கள்! மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்! 
Next articleதமிழ்நாடு 0/0.. ஆந்திரா + பீகார் 41 ஆயிரம் கோடி!! பட்ஜெட்டில் லாபமடையும் கூட்டணி கட்சிகள்!!