தமிழகத்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா நோய்த் தொற்று – எச்சரிக்கும் சுகாதார துறை

Photo of author

By Parthipan K

கடந்த மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ துவங்கியது. ஏப்ரலில் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் குறைந்த அளவிலேயே இருந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக நோய்த் தொற்றின் பரவல் தீவிரமடைந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனோ தொற்று கண்டறியப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்றின் வகை மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வரை A1, A2, A3, B1, B2 என்ற வகைகளாக கொரோனா நோய்த் தொற்று வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ற சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா நோய் பரவலின் வடிவம் வெவ்வேறு மாதிரி இருப்பது பற்றி ஏற்கனவே தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றில் சில மாற்றங்கள் ஏற்பட்டு கிளேட் Glade A13I என்ற புதிய வகை பரவி வருவதாகத் தெரியவந்துள்ளது.

மற்ற வகை கொரோனா நோய் தொற்றை காட்டிலும் இது தீவிரத்தன்மை கொண்டது என்றும் தமிழகம் தவிர தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் Glade A13 வகை நோய்த் தொற்றின் தாக்கம் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.