சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. தலைநகரில் வரப்போகிறது செல்லப்பிராணிகளுக்காக விளையாட்டு பூங்கா!!
இன்றைய காலகட்டத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.பொதுமக்கள் பூனை,நாய் போன்ற செல்லப்பிராணிளை தங்கள் குழந்தைகள் போல் வளர்த்து வருகின்றனர்.செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
ஆனால் செல்லப்பிராணிகள் வீடுகளிலேயே வளர்க்கப்படுவதால் அவற்றை நடைப்பயிற்சியின் போது அழைத்து செல்லும்பொழுது உரிமையாளரை தவிர மற்ற நபர்களை கண்டால் கடிக்க செல்கிறது.இதனால் செல்லப்பிராணிகளை கண்டால் மக்கள் பயப்படும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதனால் செல்லப்பிராணிகள் வைத்திருக்கும் நபர்கள் எவ்வித பிரச்சனையையும் இன்றி அதனுடன் நடைபயிற்சி மேற்கொள்ள,செல்லப்பிராணிகள் ஓடி விளையாட சென்னை மாநகராட்சியானது டிமாண்டி காலனி பூங்காவைச் செல்லப் பிராணிகள் விளையாட்டு பூங்காவாக மாற்ற முடிவு செய்திருக்கிறது.சுமார் 1 கோடி ரூபாய் செலவில் செல்லப்பிராணிகளுக்கான மருத்துவ வசதி,உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது.இந்த பூங்கா அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கும்,செல்லப்பிராணிகளுக்கும் இடையே ஒரு பிணைப்பு ஏற்படும்.செல்லப்பிராணிகளின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு அன்பு அதிகரிக்கும்.
சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பால் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் மற்றும் டிமாண்டி காலனி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.