உங்கள் செல்போன் தொலைந்து விட்டதா? நோ டென்ஷன்.. இப்படி செய்தால் ஜஸ்ட் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்துவிடலாம்!!
உங்களில் பலர் செல்போனை தொலைத்துவிட்டு கண்டுபிடிக்க முடியாமல் அவதியடைந்திருப்பீர்கள்.சிலரது செல்போன் திருடபட்டு இருக்கும்.எப்படியாக இருந்தாலும் காணாமல் போன செல்போனை எளிதில் கண்டுபிடிக்கும் வழிமுறைகளை மத்திய அரசு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
நமது இந்தியாவில் CEIR என்ற அடையாள பதிவேடு மூலம் போலி மொபைல் போன் சந்தைகள் குறைக்கப்பட்டு வருகிறது.இந்த அமைப்பு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் செயல்பாட்டில் இருக்கிறது.கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் காராஷ்டிரா மாநிலத்தில் முதன் முதலாக இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.பொதுமக்கள் தங்கள் செல்போனை தொலைத்து விட்டால் CEIR தளத்தின் வாயிலாக போன் இருக்கும் இடத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
பொதுமக்கள் தங்கள் செல்போன் தொலைந்து விட்டால் அதை எளிதில் கண்டறிய CEIR இணையதளத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.மத்திய அரசின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று Android மற்றும் iOSக்கான CEIR பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.
தங்கள் மொபைல் IMEI எண்ணை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.ஒருவேளை தங்களது மொபைலின் IMEI எண் தெரியவில்லை என்றால் *#06# என்று டயல் செய்து அந்த எண்ணை அறிந்து கொள்ளலாம்.இந்த IMEI எண்ணை தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும்.
உங்கள் மொபைல் தொலைந்து உறுதியானால் CEIR இணையதளத்தில் மொபைல் எண் மற்றும் கேட்கப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து புகார் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் மொபைல் சிம் கார்டு வேலை செய்யாமல் போகும்.
பிறகு புகாரின் நகலை காவல் நிலையத்தில் சமர்ப்பித்து FIR பதிவு செய்ய வேண்டும்.அடுத்து கொடுக்கப்படும் ஆன்லைன் படிவத்தில் மொபைல் எண்,மொபைல் மாடல் எண்,IMEI 1 மற்றும் 2 எண் மற்றும் FIR காப்பியையும் ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு செய்தால் உங்கள் மொபைல் முற்றிலும் செயல்படாமல் போகும்.உங்கள் மொபைல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியும்.