மத்திய அரசு வழங்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் + மானியம்!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிரதான் மந்திரி சூர்யோதயா என்ற திட்டத்தை அறிவித்தார்.சுமார் 75,000 கோடி முதலீட்டில் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
மேலும் 2024-2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் மானிய விலையில் சோலார் மின் உற்பத்தி தொகுப்பை வழங்கும் திட்டம் இவ்வாண்டு சுமார் 1 கோடி வீடுகளில் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பு நீங்கள் பயன்படுத்தியது போக மீதமுள்ள மின்சாரத்தை விற்பனை செய்து லாபம் ஈட்டலாம்.இந்த திட்டத்தில் பயனடைய விரும்பினால் நீங்கள் உங்கள் வீட்டின் கூரையில் சோலார் பேனலை நிறுவ வேண்டும்.
நீங்கள் solarrooftop.gov.in என்ற இணையதளத்தில் சோலார் பேனல் மானியம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.பிறகு உங்கள் வீட்டு கூரையில் சோலார் பேனலை நிறுவ வேண்டும்.பிறகு அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட பிறகு உரிய மானியம் வழங்கப்படும்.
சோலார் பேனல் மானிய விவரம்:
ஒரு கிலோவாட் வரை சோலார் பேனல் நிறுவினால் ரூ.18,000 மானியம் கிடைக்கும்.இரண்டு கிலோவாட் வரை சோலார் பேனல் நிறுவினால் ரூ.36,000 மானியம் கிடைக்கும்.மூன்று கிலோவாட் வரை சோலார் பேனல் நிறுவினால் ரூ.51,000 மானியம் கிடைக்கும்.வீடுகளில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டு ஒரு மாத காலம் ஆனப் பிறகே மத்திய அரசு மானியம் வழங்கும்.
சோலார் பேனல் மானியம் பெற விண்ணப்பம் செய்வது எப்படி?
முதலில் solarrooftop.gov.in என்ற இணையதளத்தில் “Apply For Rooftop Solar” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு தங்கள் வசிக்கும் மாநிலம்,மாவட்டம்,மின் நிறுவன விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.பிறகு கேட்கப்படும் ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றவும்.இவ்வாறு செய்த
20 நாட்களுக்குள் ஆய்வு நடத்தப்பட்டு மத்திய அரசு அனுமதி வழங்கும்.