மக்களுக்கு டபுள் டமாக்க ஆப்பர்.. புதிய ரேஷன் அட்டை குறித்து தமிழக அரசு வெளியிட்ட நியூ அப்டேட்!!
தமிழகத்தில் நடுத்தர வர்க்கத்தினர் எனத் தொடங்கி அடித்தட்ட மக்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ரேஷன் கார்டு மூலம் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மலிவான விலையில் அரிசி கோதுமை பருப்பு எண்ணெய் உள்ளிட்டவற்றை அரசு வழங்கி வருகிறது. அதேபோல பொங்கல் மற்றும் தீபாவளி சமயங்களில் பரிசுத்தொகை இலவச வேஷ்டி சேலை உள்ளிட்டவையும் வழங்குகிறது.
மேலும் விலைவாசி ஏற்றம் இருக்கும் போதில் அதற்கு ஏற்றவாறு அந்த பொருட்களை கொள்முதல் செய்து மலிவு விலையில் மக்களுக்கு கொடுத்து வருகிறது. தற்பொழுது மகளிருக்கு மாதம் ஆயிரம் என்று ஊக்கத்தொகையையும் வழங்கப்படுகிறது. மேற்கொண்டு புதிய பயனாளிகள் இணைக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே புதிய ரேஷன் அட்டைக்காக 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால் தொடர்ந்து மக்களவைத், தேர்தல் பை எலக்சன் என அடுத்தடுத்து நடைபெற்றதால் இதன் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் இதன் பணிகள் செயல் பாட்டுக்கு வந்துள்ளது.அந்த வகையில் புதியதாக ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் இறுதிக்குள் வழங்கப்பட்டு விடும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல ரேஷன் அட்டையை பெற்றதும் மகளிருக்கான ஆயிரம் வழங்கும் உதவித்தொகை பெறுவதிலும் விண்ணப்பம் செய்யலாம்.