போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க! சுட்டிக்காட்டிய கூகுள் மேப்!
சென்னை நகரத்தில் ஹெல்மெட் போடாமல் செல்லும் அனைவரும் சுதாரித்துக் கொள்ளும் வகையில் கூகுள் மேப்பில் போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க என்ற வாசகம் உள்ளது.
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் தற்பொழுது பல வகையான செயல்கள் வருகின்றது. அந்த வகையில் கூகுள் நிறுவனத்தால் மக்களின் உதவிக்காக கூகுள் மேப் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுள் மேப் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பல வகையான அப்டேட்டுகளை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.
மேலும் நமக்கு அருகில் உள்ள ஹோட்டல்கள், ஏடிஎம்கள், பேருந்து நிறுத்தம், மளிகை கடை என்று பல வசதிகளையும் கூகுள் மேப் வழங்கி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் நாம் செல்லும் இடங்களை மறக்காமல் இருக்க நாமே கூகுள் மேற்கில் எதாவது ஒரு தலைப்பை கொடுத்து அந்த இடத்தை கூகுள் மேப்பில் சேமித்துக் கொள்ளலாம். நமக்கு தேவைப்படும் பொழுது அந்த இடத்தை தொட்டால் நாம் இருக்கும் இடத்தில் இருந்து அந்த இடத்திற்கு கூகுள் மேப் வழிகாட்டும்.
அதே போல சென்னையில் தற்பொழுது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது சென்னை நகரத்தின் கூகுள் மேப் எடுத்து பார்க்கும் பொழுது அதில் “போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க” என்ற வாசகம் உள்ளது.
அதாவது எங்கெல்லாம் போக்குவரத்து காவலர்கள் இருக்கிறார்கள் என்பதை அறியும் வகையில் ஏதோ ஒரு நபர் இந்த வாசகத்தை கூகுள் மேப்பில் பதிவு செய்து வைத்துள்ளார். சென்னையில் சௌகார்பேட்டை அருகே இந்த வாசகங்கள் இருப்பதை நம்மால் காண முடிகின்றது.