தீராத தலைவலியால் வேதனையா? மிளகை இப்படி பயன்படுத்துங்க!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்றைய காலத்தில் தலை வலியால் பாதிக்கப்படுகின்றனர். இந்த தலை வலி என்பது அதிக வெயிலில் நாம் அலையும் பொழுது நமக்கு தலை வலி ஏற்படுகின்றது. மேலும் மன அழுத்தம் இருந்தாலும் தலை வலி ஏற்படும்
இந்த தலை வலிக்கு நிரந்தர தீர்வு என்று எதுவும் இல்லை. இருந்தாலும் தலை வலி ஏற்படும் பொழுது எல்லாம் அனைவரும் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகிறோம். மேலும் ஒரு சிலர் தங்களுக்கு தெரிந்த கை வைத்திய முறைகளை செய்கிறார்கள். உதாரணத்திற்கு வெற்றிலையை கிள்ளி நெற்றியில் ஓரத்தில் வைப்பது போன்று பல வைத்திய முறைகளை செய்வார்கள்.
அவ்வாறு தலை வலியை எளிமையாக குணப்படுத்த நாம் மிளகை பயன்படுத்தலாம். மிளகு இருமல், சளி ஆகிய பிரச்சனைகளுக்கு நல்ல ஒரு தீர்வாகும். எனவே மிளகை பயன்படுத்தி தலை வலிக்கு எவ்வாறு நல்ல மருந்தை தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்…
* மிளகு
* எலுமிச்சை சாறு
செய்முறை…
ஒரு மிக்சி ஜார் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு சில மிளகை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்து எடுத்துள்ள இந்த விழுதை நம்முடைய நெற்றியில் பற்று போட வேண்டும். இவ்வாறு செய்தால் தலைவலி உடனடியாக குணமாகி விடும்.