ஆதார் பதிவு எண் பயன்படுத்துவதற்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி!!
ஜூலை 23 அன்று நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான தனது 7-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.மக்களவை தேர்தலுக்கு முன்னர் பாதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் நேற்று மீதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.அதில் ஒன்று ஆதார் பதிவு எண்ணை பயன்படுத்த தடை விதிக்கப்படுதற்கான அறிவிப்பு.
ஆதார் பதிவு எண் பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெற்று வருகிறது.இதுபோன்ற குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக இனி பான் கார்டு பெற ஆதார் பதிவு எண் பயன்படுத்தக் கூடாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆதார் இல்லாதவர்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் பதிவு எண்ணை பயன்படுத்தலாம் என்ற விதி இருந்தது.ஆனால் தற்போதைய விவரப்படி பெரும்பாலான மக்களிடம் ஆதார் எண் இருப்பதால் அதை பயன்படுத்தி பான் கார்டுக்கு அப்ளை செய்யலாம் என்று பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆதார் பதிவு எண் பயன்படுத்தி பான் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆதார் எண் வந்ததும் அதை தெரிவிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் பதிவு ஐடி கண்டறியும் முறை:
முதலில் UIDAI என்ற இணையதளத்திற்கு சென்று “My Aadhaar” க்ளிக் செய்யவும் .பிறகு அதிலுள்ள EID/UIDஐக் கிளிக் செய்யவும்.
அடுத்து தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யவும்.அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி மற்றும் தங்களின் முழுப் பெயரை அதில் என்டர் செய்யவும்.
பிறகு கேப்ட்சா குறியீட்டை பதிவு செய்து “Send OTP” என்பதைக் கிளிக் செய்யவும்.அடுத்து OTP எண்ணை பதிவு செய்யவும்.இவ்வாறு செய்த பின்னர் EID விவரங்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.