FLASH: “ஒரே நாடு ஒரே மின் கட்டணம்” திட்டம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

0
401
FLASH: "One country, one electricity bill" project.. Important information released by the central government!!
FLASH: "One country, one electricity bill" project.. Important information released by the central government!!

FLASH: “ஒரே நாடு ஒரே மின் கட்டணம்” திட்டம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக கூட்டணி ஆட்சி முறையில் டெல்லியில் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் இருவரும் பல கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர். இதனை எப்படி கையாளுவது என்று அறியாமல் பதவியிலிருந்தாலும் இவர்களின் பிணை கைதி போல தான் தற்பொழுது மோடியின் நிலை உள்ளது.

அதுமட்டுமன்றி இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் கூட்டணியில் உள்ள இரு மாநிலங்களுக்குத்தான் அதிகளவில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நாடு முழுவதும் ஒரே மின்கட்டணம் என்ற திட்டத்தை கொண்டு வர வேண்டுமென்று வலியுறுத்தினார். “இந்த ஒரே நாடு ஒரே மின் கட்டணம்” திட்டமானது முழுமையாக கொண்டு வருவதென்பது சாத்தியமற்றது. இது குறித்து நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது என்றும் கூறலாம்.

அந்த வகையில் இன்று மத்திய மின்சார துறை இணையமைச்சர் ஶ்ரீ பத் யாசோ கூறியதாவது, மின்சாரத்துறை சட்டத்தின் 2003 விதிகளின் கீழ், ஒவ்வொருவரின் கட்டணத்தையும் அந்தந்த மாநிலத்தின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான் நிர்ணயிக்கிறது. இதனை நாடு முழுவதும் என பொதுவான முறையில் கணக்கிட முடியாது. மேற்கொண்டு நாடு முழுவதும் பொதுவான மின்சார கட்டணம் என்ற திட்டம் மத்திய அரசு கையில் இல்லை என தெளிவாக கூறியுள்ளார்.

Previous articleஆளுநர் பதிவி நீட்டிப்பு.. போடப்படும் அதிரடி வழக்கு!! மத்திய அரசுக்கு பறந்த கடிதம்!!
Next articleசம்பள உயர்வு.. இந்த அரசு ஊழியர்களுக்கு ரூ 6000 எப்படி கட்டுப்படியாகும்!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!