கூகுள் Searchக்கு ஆப்பு வைத்த ஓபன் ஏஐ நிறுவனம்! வந்தாச்சு புதிய AI சர்ச் இன்ஜின்!
பிரபல மென்பொறி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தேடுதலமான கூகுள் சர்ச் இன்ஜினுக்கு போட்டியாக தற்பொழுது ஓபன் ஏஐ நிறுவனம் புதிய ஏஐ பவர்டு சர்ச் இன்ஜின் வசதியை அறிமுகம் செய்து உள்ளது.
அதாவது நம்முடைய அனைவருடைய தேவைக்காகவும் ஓபன் ஏஐ நிறுவனம் சேட் ஜிபிடி என்ற வசதியை அறிமுகம் செய்திருந்தது. தற்பொழுது அதே போல ஓபன் ஏஐ நிறுவனம் முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து. உருவாக்கப்பட்ட சர்ச் ஜிபிடி என்ற அச்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் இந்த சர்ச் ஜிபிடி வசதி மற்ற தேடு பொறிகளாக இருக்கும் கூகுள் நிறுவனத்தின் கூகுள் சர்ச் இன்ஜினுக்கும் பிங் சர்ச் இன்ஜினுக்கும் போட்டியாக இருக்கக் கூடும்.
இந்த சர்ச் ஜிபிடி(Search GPT) மற்ற தேடு பொறிகளைப் போல இல்லை. நாம் தேடும் தகவல்களுக்கு தெளிவான ஆதரங்களுடன் விரைவாக நிகழ்நேரப் பதிவுகளை வழங்குகின்றது. மேலும் இந்த சர்ச் ஜிபிடி மற்ற தேடு பொறிகளைப் போல இல்லாமல் நமக்கு வெப் பேஜ் லிங்குகளையும் வழங்குகின்றது.
எடுத்துக்காட்டாக தற்பொழுது வாட்ச்ஆப் செயலியில் அறிமுகம் ஆகியுள்ள ஏஐ போலவே இந்த சர்ச் ஜிபிடி இருக்கும். சர்ச் ஜிபிடியை அறிமுகம் செய்த ஓபன் ஏஐ நிறுவனம் கூகுளுக்கும் பிங் சர்ச் இன்ஜினுக்கும் மிகப்பெரிய தலைவலியை தந்துள்ளது.