பயணிகள் கவனத்திற்கு.. மலைக்கு மேல் வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை!!
முருகனின் ஆறுபடை வீடுகளிலும் கிருத்திகை சஷ்டி உள்ளிட்ட சிறப்பு தினங்களில் மக்களின் கூட்டம் அலைமோதும். அறுபடை வீடுகள் மட்டுமின்றி முருகனின் தலங்கள் அனைத்திலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் இருக்கும். மேற்கொண்டு இந்த சிறப்பு தினங்களில் மக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பாக பல பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்படும்.
அந்த வகையில் ஒவ்வொரு கோவில்களிலும் ரோப் கார் மற்றும் பேருந்து வசதி கழிப்பிட வசதி காத்திருப்பு அறை ஆகியவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் மருதமலை கோவிலில் கடந்த வருடம் மக்களின் தேவைக்கான மேம்பாட்டு பணி நடைபெற்று வந்தது. அந்த நாட்களில் மட்டும் மலைக்கு மேல் செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனைப் போலவே இம்முறை ஆடிக் கிருத்திகை என்பதால் மக்களின் கூட்டம் வெகு விமர்சையாக இருக்கும்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க வரும் மூன்று நாட்களிலும் மலைக்கு மேல் செல்ல தடை விதித்துள்ளனர்.இதற்கு மாறாக பக்தர்கள் படிக்கட்டு வழியாகவும் பேருந்து மூலமாகவும் செல்லலாம் என்று தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மலைக்கும் மேல் செல்ல முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். ஆடி கிருத்திகை முடிந்து வழக்கம் போல் அனைத்து வாகனங்களும் மலைக்கும் மேல் செல்லலாம் என்று உத்தரவிட்டுள்ளனர்.