சூப்பர் அறிவிப்பு.. ரூ.7.5 லட்சமாக கடன் உதவி கொடுக்கும் மத்திய அரசு!! யாரெல்லாம் பயன்பெற முடியும்?
நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடளுமன்றத்தில் கடந்த செவ்வாய் அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்தார்.அதில் மாதிரி திறன் கடன் திட்டத்திற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உரையில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பாதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தேர்தலில் வெற்றிபெற்று 3வது முறையாக ஆட்சியை பிடித்த பிறகு வெளியான முதல் பட்ஜெட் என்பதினால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்பட்டது.விவசாயம்,இலவச வீடு,வேலைவாய்ப்பு,முத்ரா கடன் உள்ளிட்டவை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது.இதில் மாதிரி திறன் கடன் திட்டத்திற்கான கடனுதவி அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர் மாதிரி கடன் திட்டம் வாயிலாக ரூ.1.5 லட்சம் வரை மட்டுமே கடன் பெற முடியும் என்பதினால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் குறைவான திறன் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.இந்நிலையில் தற்பொழுது திருத்தப்பட்ட திட்டத்தில் ரூ.7.5 வரை கடன் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஆண்டிற்கு சுமார் 25,000 மாணவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
இதற்கு முன்னர் மாதிரி திறன் திட்டத்தில் பொதுத்துறை வங்கிகள்,தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்தது.இதனால் உரிய நேரத்தில் காலத்தில் கடன் பெற முடியாமல் மாணவர்கள் சிரமங்களை சந்தித்து வந்தனர்.இந்நிலையில் தற்பொழுது புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் மூலம் நிதி நிறுவனங்கள்,மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மூலமும் எளிதில் கடன் பெறமுடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.இந்த கடனுதவி மூலம் மாணவர்களால் தங்களுக்கு விருப்பமான திறன் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க முடியும்.