மத்திய அரசு வழங்கும் 20 லட்சம் கடனுதவி!! என்னென்ன ஆவணங்கள் தேவை?? எப்படி விண்ணப்பிப்பது?? முழு விவரம் இதோ!!
கடந்த ஜூலை 23 அன்று மூன்றாவது முறை ஆட்சியை தக்கவைத்த மோடி அவர்களின் தலைமையிலான ஆட்சியின் முதல் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இதில் வேளாண்,ஏழைகளுக்கு இலவச வீடு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றது.
மேலும் சுயத் தொழில் தொடங்க உள்ளவர்களுக்கு முத்ரா கடன் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக வழங்கப்படும் என்ற அட்டகாசமான அறிவிப்பு பலரை கவர்ந்துள்ளது.
புதிதாக தொழில் தொடங்க விரும்பும் நபர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா.இந்த திட்டத்தின் மூலம் நபர் ஒருவருக்கு ரூ.50,000 முதல் ரூ.1,000,000 வரை கடன் வழங்கப்பட்டு வந்தது.இக்கடன் பெற எந்தஒரு உத்திரவாதம் தேவையில்லை என்பது முத்ரா கடன் திட்டத்திற்கான தனி சிறப்பு.18 வயது 65 வரை உள்ள தகுதி வாய்ந்த இந்திய குடிமகன்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.
இத்திட்டத்தின் கீழ் கடன் பெற்ற ஒருவர் மூன்று முதல் இந்தாண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்திவிட வேண்டும்.
PM முத்ரா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வது எப்படி?
முதலில் www.mudra.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள .
ஷிஷு,தருண் மற்றும் கிஷோர் ஆகிய மூன்று ஆப்ஷன்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும்.
பிறகு தோன்றும் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை சரியாக நிரப்பி உரிய ஆவணங்களை இணைத்து வங்கியில் சமர்ப்பிக்கவும்.வங்கி ஒப்புதலுக்குப் பிறகு முத்ரா கடன் திட்டத்தில் கடனுதவி வழங்கப்படும்.
விண்ணப்பம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:
1)பாஸ்புக்
2)ஆதார் கார்டு
3)இருப்பிட சான்றிதழ்
4)விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
5)பான் அட்டை
6)பிறப்புச் சான்றிதழ்
7)ஓட்டர் ஐடி
8)ஓட்டுநர் உரிமம்
9)வணிக முகவரி சான்று
10)கடந்த ஒரு வருட வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட்