நெஞ்சு சளி உடனே குறைய வேண்டுமா? தேங்காய் பாலில் இதை கலந்து குடிங்க! 

0
308
Want a chest cold to subside immediately? Mix it with coconut milk and drink it!
Want a chest cold to subside immediately? Mix it with coconut milk and drink it!
நெஞ்சு சளி உடனே குறைய வேண்டுமா? தேங்காய் பாலில் இதை கலந்து குடிங்க!!
நமக்கு சளி பிடித்திருக்கும் நேரங்களில் மார்பிலும் சளி தேங்கும். இதை நெஞ்சு சளி என்று அழைப்பார்கள். இந்த நெஞ்சு சளி அதிகமானால் அது நமக்கு நுரையீரல் பிரச்சனையை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. எனவே உடனே நெஞ்சு சளியை குறைக்க வேண்டும்.
நெஞ்சு சளியை குறைக்க நாம் தேங்காய் பால் குடிக்கலாம். வெறும் தேங்காய் பாலில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. மேலும் இதில் ஒரு சில பொருட்களை கலந்து குடிக்கும் பொழுது நம்முடைய நெஞ்சில் இருக்கும் சளி அனைத்தும் வெளியே வந்துவிடும். அது என்னென்ன பொருட்கள், எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* தேங்காய் பால்
* மிளகு
* சுக்கு
* திப்பிலி
செய்முறை…
முதலில் தேங்காயை அரைத்து அதிலிருந்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்து நாம் எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை அதில் சேர்க்க வேண்டும்.
பின்னர் இந்த தேங்காய் பாலில் மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய மூன்றையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின்னர் இதை இறக்கி விட வேண்டும். பின்னர் இளஞ்சூடான பிறகு இதை குடிக்கலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி உடனே வெளியே வந்து விடும்.
Previous articleமத்திய அரசு வழங்கும் 20 லட்சம் கடனுதவி!! என்னென்ன ஆவணங்கள் தேவை?? எப்படி விண்ணப்பிப்பது?? முழு விவரம் இதோ!!
Next articleதீயினால் பட்ட காயம் இன்னும் ஆறவில்லையா? அப்போ இதை மட்டும் பண்ணுங்க!