சிலிண்டர் விலை.. மின் கட்டணத்தில் புதிய மாற்றம்? ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதெல்லாம் மாறப்போகிறது!
நாட்டில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் கேஸ் சிலிண்டர் விலை,பெட்ரோல் விலை உள்ளிட்டவைகளில் மாற்றம் ஏற்படுவது வழக்கம்.அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படுமா என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஆகஸ்ட் மாதத்திற்கான வீடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறையலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் ரூ.818.50க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மேலும் அதன் விலை குறைந்தால் மக்களுக்கு பயன்தரக் கூடிய ஒன்றாக இருக்கும்.அதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து QR ஸ்கேன் முறையில் சிலிண்டர் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று மேற்கல்வி தொடரும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் மாதம் முதல் ரூ.1,000 வழங்கப்பட இருக்கிறது.இந்த திட்டத்தின் மூலம் சுமார் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
அதேபோல் ஆதார் விவரங்களை திருத்த அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக ஆதார் விவரங்கள் புதுப்பிக்காதவர்கள் சமீபத்திய தகவலுடன் கூடிய விவரங்களைப் புதுப்பிக்குமாறு ஆதார் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
எச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு CRED,Cheq போன்ற பிற சேவைகளைப் பயன்படுத்த பரிவர்த்தனை தொகையில் இருந்து 1% வசூலிக்கப்படும் என்று அவ்வங்கி தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.வருகின்ற மாதம் முதல் புதிய முறையில் மின் கட்டணம் வசூலிக்கப்படும்.சுமார் 1 கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு இல்லை. அதேபோல் புதிதாக ரேசன் அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்பட இருக்கிறது.