மாத வருமானம் ரூ.15,000க்கு இருப்பவரா? அரசு வழங்கும் ரூ.3000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

0
312
tamil-development-and-information-minister-m-p-saminathans-new-announcement-the-new-change-in-the-grant-given-to-senior-tamil-scholars
tamil-development-and-information-minister-m-p-saminathans-new-announcement-the-new-change-in-the-grant-given-to-senior-tamil-scholars

மாத வருமானம் ரூ.15,000க்கு இருப்பவரா? அரசு வழங்கும் ரூ.3000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

அமைப்பு சாராத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு “பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் காய்கறி விற்பனையாளர்,வீட்டு வேலை செய்பவர்கள்,தையல் தொழில் செய்பவர்கள்,தினக் கூலி தொழிலாளர் என்று மாதம் ரூ.15,000 அல்லது அதற்கு குறைவான வருமானம் ஈட்டுபவர்கள் இந்த திட்டத்தின் பயன்பெற தகுதியானவர்கள்.

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி யோஜனா

18 வயதை நிரம்பியவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியும்.இத்திட்டத்திற்கான அதிகபட்ச வயது தகுதி 40 ஆகும்.

மாத வருமானம் ரூ.15,000 அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும்.

அமைப்பு சாராத் தொழிலாளர்களாக இருக்க வேண்டும்.

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி யோஜனா திட்டத்தில் இணைய தேவைப்படும் ஆவணங்கள்:

1)ஆதார் அட்டை
2)வங்கி கணக்கு எண்
3)பயனாளர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

18 வயது நிரம்பிய ஒருவர் இந்த திட்டத்தை தொடங்கிய பின்னர் ஒவ்வொரு மாதமும் ரூ.55 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.அதேபோல் 40 வயதிற்கு மேற்பட்டோர் இந்தத் திட்டத்தை தொடங்கினால் ஒவ்வொரு மாதமும் ரூ.200 டெபாசிட் செய்ய வேண்டும்.

தங்களுக்கு 60 வயது பூர்த்தியான பின்னர் மாதம் ரூ.3000 ஓய்வூதியம் கிடைக்கும்.இந்த திட்டத்தில் முதலீடு செய்வோர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால் அவரது துணைக்கு 50% பென்ஷன் கிடைக்கும்.இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி உரிய ஆவணங்கள் வைத்து கணக்கு தொடங்கலாம்.

மேலும் www.maandhan.in என்ற இணையதளம் வாயிலாகவும் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கி குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்து வரலாம்.