பத்தாம் வகுப்பு தேர்வு – உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு

0
119

கொரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு தள்ளி வைக்கப்பட பல தேதிகள் பரீசிலிக்கப்பட்டு இம்மாதம் 15ம் தேதி முதல் நடத்த தமிழக கல்வி துறை திட்டமிட்டது.

இதற்கான அறிவிப்பை வெளியிட்டு தேர்வுகள் துறையுடன் இனைந்து இதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருவதால், இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தேர்வு அவசியமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

லட்சகணக்கான மாணவர்களின் நலனில் ஏன் ஆபத்தான முடிவை எடுக்கிறீர்கள்? பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒரு மாதம் தள்ளி வைக்காமல் ஏன் அவசரம் காட்டப்படுகிறது. மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்து கொண்டு அமைதியாக முடியாது. 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய்த்துறையினரை நெருக்கடிக்கு ஆளாக்கப்படுவது ஏன்? 9 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விவகாரம் இது.

ஊரடங்கு காலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டிய அவசியம் ஏன் உள்ளது என நினைக்கிறீர்கள்? பள்ளிகள் திறப்பதை ஜூலையில் முடிவெடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை மீறுவீர்களா? இவ்வாறு அதிரடியான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

மேலும், முதல்வர் மற்றும் அமைச்சர் கலந்தாலோசித்து தேர்வை 1 மாதம் ஒத்திவைப்பது தொடர்பாக பிற்பகலுக்குள் பதிலளிக்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உயர்நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதல்வர் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்

Previous articleஅரசு வேலைக்காகத் தந்தையவே கொன்ற மகன்! காவல்துறையின் திடுக்கிடும் தகவல்
Next articleகொரோனா பாதிப்பால் மேலும் ஒரு பெண்மணி உயிரிழப்பு! விழுப்புரத்தில் பலி எண்ணிக்கை உயர்வு!