மழைக்காலங்களில் பரவும் டெங்கு காய்ச்சல்! இது எப்படி பரவுகிறது? தடுக்கும் வழிமுறைகள்!!

Photo of author

By Divya

மழைக்காலங்களில் பரவும் டெங்கு காய்ச்சல்! இது எப்படி பரவுகிறது? தடுக்கும் வழிமுறைகள்!!

காலநிலை மாற்றம் மற்றும் பருவ மழைக்காலங்களில் வகை வகையான காய்ச்சல் உருவாகிறது.இதில் பெரும்பாலான காய்ச்சல் கொசுக்களால் உருவாகுகின்றன.கொசுக்கள் மூலம் வைரஸ் தொற்றுகள் ஏற்படுவதால் நமது ஆரோக்கியம் பலத்த சேதத்தை சந்திக்கின்றது.

சாதாரண காய்ச்சல் போன்று டெங்குவால் ஏற்படக் கூடிய காய்ச்சல் எளிதில் குணமாவதில்லை.இந்த காய்ச்சல் நீண்ட நாட்களுக்கு நீடிக்கின்றது.தேங்கிய நீர்நிலைகளில் ஏடிஎஸ் என்ற கொசுக்கள் முட்டையிட்டு கொசுப்புழுக்களை உற்பத்தி செய்து டெங்கு வைரஸை பரப்புகிறது.இது ஒரு வெப்பமண்டல நோய் என்று அழைக்கப்படுகிறது.தமிழ்நாடு,கேரளா,கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இந்த டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது.டெங்கு காய்ச்சல் பாதித்த ஒருவரை கடித்த கொசுக்கள் நம்மை கடிக்கும் பொழுது இரத்தத்தில் வைரஸ் தொற்று பரவுகிறது.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்:-

1)அதிகப்படியான காய்ச்சல்
2)மூட்டு வலி,தசை வலி
3)தோல் அரிப்பு
4)உடல் சோர்வு
2)தலைவலி
3)சிறுநீர் பாதையில் இரத்த கசிவு
6)பல் ஈறுகளில் இரத்த கசிவு

குடியிருப்பை சுற்றி கொசுக்கள் நடமாட்டம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.தேங்கிய கழிவு நீரை அகற்றிவிட வேண்டும்.தண்ணீர் இருக்கும் குடம்,தொட்டிகளை மூடி வைத்து பராமரிக்க வேண்டும்.

டெங்கு பாதித்தவர்கள் பப்பாளி இலை சாறு,நிலவேம்பு கஷாயம் உள்ளிட்டவற்றை குடித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள வேண்டும்.மஞ்சள்,வெந்தயம்,மாதுளை சாறை டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் எடுத்துக் கொள்வதினால் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படும்.மேற்குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தீவிரமானால் ஒரு நொடி கூட தாமதிக்காமல் உரிய மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வது ஆபத்தான சூழ்நிலை ஏற்படுவதை தடுக்கிறது.