ரிஸ்க் இல்லாத முதலீடு.. ஐந்தாண்டுகளில் 15 லட்ச ரூபாய் கிடைக்க இந்த திட்டத்தில் இன்வெஸ்ட் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

ரிஸ்க் இல்லாத முதலீடு.. ஐந்தாண்டுகளில் 15 லட்ச ரூபாய் கிடைக்க இந்த திட்டத்தில் இன்வெஸ்ட் செய்யுங்கள்!!

சேமிப்பு,முதலீடு என்பது நமது எதிர்கால வாழைக்காயை பிரகாசமாக்க கூடிய நல்ல பழக்கங்களாகும்.நாம் கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தை பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்து நல்ல லாபம் பெற வேண்டும்.

அதன்படி,நமது முதலீட்டிற்கு 100% உத்திரவாதம் கொடுக்க கூடிய திட்டங்கள் போஸ்ட் ஆபிஸில் வரிசை கட்டி நிற்கிறது.முதலீட்டு பணத்திற்கு அதிக வட்டி கடவுக கூடிய போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் சாமானியர்களுக்கு வரப் பிரசாதம் போன்று.மத்திய அரசுக்கு கீழ் இயங்கி வரும் போஸ்ட் ஆபிஸில் ஐந்தாண்டு,பத்தாண்டு,பதினைந்து ஆண்டு என்று பல முதலீட்டு திட்டங்கள் இருக்கின்றது.

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்

ஐந்தாண்டு சேமிப்பு திட்டமாக டைம் டெபாசிட் உள்ளது.முதல் ஆண்டில் 6.9%,இரண்டாம் ஆண்டில் 7.0%,மூன்றாம் ஆண்டில் 7.1% மற்றும் ஐந்தாம் ஆண்டில் 7.5% வட்டி வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில் முதலீடு குறைந்தபட்ச தொகை ரூ.1000 முதலீடு செய்யலாம்.அதிகபட்ச வரம்பு தொகை நிர்ணயம் செய்யப்படவில்லை.

18 வயது நிரம்பிய இந்திய குடிமகன்கள் அனைவரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியானவர்கள் ஆவர்.மூன்று பேர் வரை இந்த திட்டத்தின் ஜாயிண்ட் கணக்கு தொடங்கலாம்.குழந்தைகள் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உதவியுடன் டைம் டெபாசிட் கணக்கு தொடங்கலாம்.தனி நபர் ஒருவர் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் தொடங்கலாம்.

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கணக்கு தொடங்க தேவைப்படும் ஆவணங்கள்:

1)ஆதார் அட்டை
2)பான் அட்டை
3)ரேசன் அட்டை
4)வாக்காளர் அட்டை