வேலைக்கு செல்லாமல் கை காசு போடாமல்.. வீட்டில் இருந்தபடி சம்பாதிக்கலாம்!இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
இன்றைய காலத்தில் குறைந்தது ரூ30,000 மாத சம்பளம் இருந்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கையை நகர்த்த முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.கடுமனையான விலைவாசி உயர்வு,குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம்,மருத்துவ செலவு உள்ளிட்டவற்றை குறைவான வருமானத்தின் கொண்டு பூர்த்தி செய்ய முடியாது.ஆகவே பார்ட் டைம் ஜாப்,பிசினஸ் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை தொடங்கினால் மட்டுமே பணப் பிரச்சனை,கடன் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.
இதில் முதலீடு மற்றும் உடல் உழைப்பு இல்லாமல் மாத மாதம் வருமானம் ஈட்ட வேண்டும் என்பது இன்றைய தலைமுறையினரின் எண்ணமாக இருக்கிறது.இது சாத்தியமான ஒன்று தான்.உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் சிறிதளவு இடம் இருந்தாலே போதுமானது.
கடந்த மாதத்தில் ஜியோ,ஏர்டெல்,விஐ (VI) போன்ற டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான ரீஜார்ஜ் பிளானின் விலையை உயர்த்தியது.இதனால் மிடில் கிளாஸ் மக்கள் கடும் அதிருப்த்தி அடைந்தனர்.ஜியோ,ஏர்டெல்,விஐ வாடிக்கையாளர்கள் மலிவு விலையில் ரீஜார்ச் செய்ய பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மாறி வருகின்றனர்.BSNL மூலம் குறைவான விலையில் ரீஜார்ச் செய்ய முடியும் என்றாலும் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் தற்பொழுது அந்நிறுவனம் புதிய தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்க திட்டமிட்டிருக்கின்றது.
BSNL பிடெலிகாம் டவரை உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் நிறுவ அனுமதி வழங்கினால் அந்நிறுவனத்தில் இருந்து மாத மாதம் வாடகை கிடைக்கும்.
நீங்கள் Indus Towers என்ற இணையதளத்தை கிளிக் செய்தால் வலது மூலையில் மூன்று விருப்பங்கள் தோன்றும்.அதில் ‘நில உரிமையாளர்கள்’ என்பதை கிளிக் செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பிறகு indus Towers உங்கள் வீட்டு மாடியை ஆய்வு செய்வார்கள்.டவர் அமைக்க உங்கள் வீட்டு மாடி சரியான இடமாக இருக்கும் பட்சத்தில் பிஎஸ்என்எல் அனுமதியின் படி டவர் அமைக்கும் பணி நடைபெறும்.பிறகு BSNL நிறுவனத்திடம் இருந்து மாதந்தோறும் வாடகை கிடைக்கும்.டவர் அமைக்க ஒப்புக்கொள்வதற்கு முன்னர் நிறுவனத்தின் ஒப்பந்த விதிமுறைகள் அறிந்து கொள்வது அவசியமாகும்.