தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் சார்ந்த படிப்பிற்காக அமெரிக்கா செல்ல உள்ளார். இவர் வரும் வரை கட்சியை வழிகாட்டி நடத்த புதிய தலைவர் நியமிப்பது குறித்து தினந்தோறும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. அந்த வகையில் அனைவருக்கும் பரிச்சயமான தமிழிசை சௌந்தர்ராஜன் வருவாருவாரென்று பலரும் கூறுகின்றனர். அவர் வந்தால் மட்டுமே இந்த இடைப்பட்ட காலத்தில் அதிமுகவுடன் மீண்டும் இணைய அதிக வாய்ப்புக்கள் உள்ளது.
ஆனால் இவரை நிரந்தர பாஜக மாநில தலைவராக நியமிக்க முடியாத காரணத்தினால் இதுகுறித்து தமிழிசை சற்று சிந்தனையில் உள்ளாராம். இவரைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் இந்த வரிசையில் உள்ளனர். தற்பொழுது இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை கைது செய்தது குறித்து அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். இவரைத் தொடர்ந்து கட்சிய ரீதியான சில பேச்சுவார்த்தை குறித்து நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார்.
குறிப்பாக நயினார் சென்றுள்ளதற்கு முக்கிய காரணம் அடுத்த தமிழக பாஜக தலைவர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தான் என கூறுகின்றனர். இதிலும் இவரையே நியமிக்கப்படலாம் என்றும் அல்லது வானதீ சீனிவாசன் இடம்பெறவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கா செல்ல உள்ளதால் தனது ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை மேலிடத்தில் கொடுத்து விட்டதாகவும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒரு சில தினங்களில் புதிய தமிழக பாஜக தலைவர் களமிறங்குவது குறித்த புதிய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.