திமுகவின் நிர்வாகிகள் பலர் அடுத்த துணை முதல்வர் உதயநிதி என்று கூறினாலும் மூத்த அமைச்சர்கள் அதில் பெரும்பாலும் விருப்பம் தெரிவிக்கவில்லை. கட்சிக்காக அயராது உழைத்திருக்கும் தங்களை விட்டுவிட்டு தற்பொழுது வந்த தனது மகனுக்கு உடனடியாக பதவி கொடுக்க வேண்டுமா என்ற கேள்வி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் இது குறித்து ஸ்டாலினிடம் கேட்ட பொழுது கூட, கோரிக்கைகள் வலுத்துள்ளதே தவிர்த்து பழுக்க வில்லை என சூசனமாக பதில் கூறினார்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது உதயநிதி துணை முதல்வர் பதவி குறித்து பாஜக துணை தலைவர் கே பி ராமலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியதாவது, மக்களுக்கு எதிராக பல சூழ்ச்சிகளை செய்து வரும் திமுக தங்களது தவறை மறைப்பதற்காகவே பல போராட்டங்களை முன்னடத்தி வருகின்றனர். குறிப்பாக மத்திய அரசை குற்றம் சாட்டி ஒரு இடத்தில் கூட பட்ஜெட் தாக்களில் தமிழகப் பெயர் வரவில்லை என்று திமுக கூறுகிறது. ஆனால் மத்திய அரசு எதற்கெல்லாம் நிதி ஒதுக்கி உள்ளது என்பதை பட்டியலிடாமல் போராட்டம் நடத்துவது மக்களின் கவனத்தை திருப்பத்தான்.
இவ்வாறு மத்திய அரசை மக்கள் மத்தியில் தவறான பிம்பமாக காட்டுவது முற்றிலும் தேச விரோதம். அதேபோல ஆந்திராவிற்கு மட்டும் 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது குறித்து கேள்வி எழுப்புகிறது. ஆனால் அது முற்றிலும் மாநிலம் பிரிக்கப்பட்டதற்கான மேம்பாட்டு பணிக்கான நிதி. இதே போல தமிழகம் மூன்று மாநிலமாக பிரிக்கப்படும் பட்சத்தில் கட்டாயம் மத்திய அரசிடமிருந்து நிதி ஒதுக்கப்படும். உதயநிதி துணை முதல்வர் பதவியில் உட்கார போவதை தமிழக மக்கள் பார்க்க தான் போகிறார்கள்.
அதேபோல திமுக அமைச்சர்கள் அமலாக்கத்துறை பிடியில் இருப்பதற்கு பாஜக முக்கிய காரணம் என்று கூறுவது முற்றிலும் பொய். இந்த ஊழல் தடுப்பு போன்ற எந்த ஒரு பிரிவிலும் மத்திய அரசின் தலையீடு என்பதே இல்லை. திமுகவை தமிழகத்தில் இருந்து முற்றிலும் அகற்ற வேண்டும் இதுதான் பாஜகவின் முதற்கட்ட லட்சியம் என தெரிவித்தார். ஆனால் சமீபத்தில் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கானது மீண்டும் மேல்முறையீடு செய்து விசாரணைக்கு வந்துள்ளது.
கடந்த முறை தங்கம் தென்னரசு மற்றும் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரின் வழக்குகள் ஆதாரம் ஏதும் இல்லை என தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது இந்த வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. இது பாஜகவின் மேலிடம் போட்ட அழுத்தத்தின் காரணமாக இருக்கலாம் என கூறுகின்றனர்.