ஆந்திர அரசு போல ஒருவருக்கு 10 ஆயிரம் நிவாரணம்? உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

0
71
Tamilnadu Assembly-News4 Tamil Online Tamil News
Tamilnadu Assembly-News4 Tamil Online Tamil News

அரசு பதிவு செய்யாத ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 24 ஆம் தேதியிலிருந்தகு கொரோனா தொற்றுக் காரணமாக ஐந்து கட்டமாக ஊரடங்கு ஜூன் 30ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கட்டத்திலும் சில தளர்வுகள் இருந்தபோதிலும் பொது போக்குவரத்திற்கும் மற்றும் ஆட்டோ ரிக்ஷா டாக்ஸி போன்ற போக்குவரத்திற்கும் நான்காம் கட்ட ஊரடங்கு வரை முழு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

ஐந்தாம் கட்ட ஊரடங்கில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மண்டலங்களில் பொது போக்குவரத்து மற்றும் ஆட்டோ ரிக்ஷா டாக்சி போன்ற போக்குவரத்து இயங்க அரசு அனுமதி அளித்த பின்பும் கொரோன அச்சுறுத்தலால் பொதுமக்கள் ஆட்டோ ,ரிக்ஷா, டாக்ஸி போன்ற போக்குவரத்துகளை பெரியதும் பயன்படுத்தவில்லை.

இந்நிலையில் தினசரி வருவாயை நம்பி இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆர்.எஸ். மங்கலத்தில் ஓட்டுனர் பாண்டி கூறுகையில் அரசுத்தரப்பில் இரண்டு கட்டங்களாக தொழிலாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டும் அரசால் ரூ 1000 வழங்கப்பட்டது. ஆனால் ஆர்.எஸ் மங்கலத்தில் 90 சதவீத ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிலாளர் சங்கத்தில் பதிவு செய்யப்படாதவர்களே என்று ஆட்டோ ஓட்டுனர் பாண்டி கூறுகிறார்.

அரசு தாலுகா வாரியாக கணக்கெடுத்து, பாதிக்கப்பட்டுள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.ஓட்டுனர் வேல்முருகன் கூறுகையில் ஆந்திரா அரசு போல் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ 10 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

author avatar
Pavithra