அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சலுகை! தமிழக முதல்வர் உத்தரவு

0
79

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு குறித்து முதல்வரிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீட் என்பது பொது மருத்துவ, பல் மருத்துவ துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்திய மருத்துவக் குழுமம் சட்டம் – 1956 இன் 2018 திருத்தம் மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948 இன் 2018 திருத்தம் ஆகியவற்றின்படி அகில இந்திய அளவிலான நடத்தப்படும் நுழைவு தேர்வு ஆகும்.

இதன் அடிப்படையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான சீட்டுகள் நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கே வழங்கப்படுகின்றன.நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை குறைந்து வருகிறது.

இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்குப் பரிந்துரைகள் வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கொண்ட குழுவினை முதல்வர் பழனிசாமி அமைத்தார்.

கலையரசன் கொண்ட குழுவினர் பல்வேறு தரப்பிலும் ஆலோசனை செய்து ஆய்வுகள் நடத்தி அறிக்கையை நேரில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் திங்கள்கிழமை வழங்கினர். அப்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், துறையின் செயலாளர் தீரஜ்குமார் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மூன்று மாதங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தனி இடஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.





author avatar
Pavithra