2000 ஆம் வருடத்தில் பிறந்தவர்களுக்கு இது தான் லாஸ்ட் ஜான்ஸ்!! உடனே இதை செய்யுங்கள்!!
இந்தியாவில் ஆதார்,பான் கார்டு போலவே பிறப்பு சான்றிதழ் ஒரு முக்கிய ஆவணமாக திகழ்கிறது.பள்ளி சேர்க்கை,ரேசன் அட்டையில் பெயர் சேர்த்தல்,கல்லூரியில் பிறப்பு சேர்க்க,ஆதார்,பான் கார்டில் பிறந்த தேதியை பதிவு செய்ய பிறப்பு சான்றிதழ் முக்கிய ஆவணமாக திகழ்கிறது.
ஆதார்,பான் போன்று பிறப்பு சான்றிதழும் ஒரு ஆவணம் என்று மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு(திருத்தும்) 2023,சட்டம் கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்தியது.மத்திய அரசின் இந்த இந்த சட்டத்தின் மூலம் இனி பிறப்பு சான்றிதழையும் ஒரு ஆவணமாக பயன்படுத்த முடியும்.
இதனால் பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்கள் அதனை பதிவு செய்து பெற்றுக் கொள்ள கால அவகாசம் வழங்கபட்டிருக்கிறது.குறிப்பாக 2000 ஆம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களில் பிறப்பு சான்றிதழ் பதிவு செய்யாதவர்கள் இந்த வருடத்தின் கடைசி தேதிக்குள் பிறப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி இருக்கின்றது.
இதுவரை பிறப்பு சான்றிதழை பதிவு செய்யாதவர்கள்,குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்காத பெற்றோர் விரைவில் பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்வது நல்லது.
2000 ஆம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ள முடியும்.அதேபோல் பிறப்பு சான்றிதழ் பெற கிராம பஞ்சாயத்துகளில் பதிவு செய்து இணையத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும்.
தங்கள் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெற குழந்தை பிறந்த மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட RCHID பதிவெண் தேவைப்படும்.அந்த எண்ணை அதில் பதிவிட்டு ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நம்பரை என்டர் செய்யவும்.
அடுத்து தங்கள் குழந்தையின் பாலினம்,அவரின் வயது,பிறந்த தேதி,ஊர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.