வரலட்சுமி நோன்பு சிறப்புகள்! யாரெல்லாம் விரதம் இருக்க வேண்டும்? பூஜைக்கு வாங்க வேண்டிய பொருட்கள் என்ன?
தமிழ் மாதங்களில் பக்தி மாதமாக அம்மனை வழிபட உகந்த மாதமாக இருப்பது ஆடி.இந்த மாதத்தின் மிகவும் முக்கிய விசேஷமாக இருப்பது வரலட்சுமி விரதம்.இது ஆடி மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை அன்று வரக் கூடிய ஒரு பண்டிகையாகும்.
வரலட்சுமி விரத நாளில் மகா லட்சுமி தாயாரை வழிபட்டால் அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்புடன் வாழ தாயார் அருள் புரிவார் என்று நம்பப்படுகிறது.பொதுவாக பெண்கள் தான் வரலட்சுமி விரத பூஜையை செய்வார்கள்.ஆனால் ஆண்களும் இந்நாளில் மகாலட்சுமி விரதம் இருந்து பூஜை செய்யலாம்.ஆடி மாதத்தின் வளர்பிறையில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையில் வரக் கூடிய மகாலட்சுமி நோம்பு வரங்களை அள்ளித் தரும்.உங்கள் வாழ்வில் தொடர்ந்து கஷ்டம் ஏற்படுகிறது என்றால் நீங்கள் இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடித்து பலன் பெறலாம்.
இந்த வரலட்சமி விரத நாளில் சுமங்கலி பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் நீடிக்க வேண்டும் என்பதற்காக விரதம் இருந்து வழிபடு செய்வார்கள்.அதேபோல் திருமணமாகாத பெண்களும் கையில் நோன்பு கயிறு கட்டிக் கொண்டு வரலட்சுமி விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.சுமங்கலி பெண்கள்,திருமணமாகாத பெண்கள் மட்டுமல்ல இந்த வரலட்சுமி பூஜையை யாரு வேண்டுமானாலும் செய்யலாம்.
வரலட்சுமி விரதம் அவசியம் கடைபிடிக்க வேண்டியவர்கள் யார்?
உங்கள் ஜாதகப்படி சுக்கிரனுடன் ராகு, கேது, மாந்தி சேர்ந்து இருந்தால் நீங்கள் வரலட்சுமி விரதம் இருக்க வேண்டும்.
பணப் பிரச்சனை,பணமிழப்பு இருப்பவர்கள் வரலட்சுமி விரதம் இருந்து வழிபட வேண்டும்.
ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டு போய் இருப்பவர்கள் வரலட்சுமி விரதம் இருந்து வழிபடலாம்.
அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை,கணவன்-மனைவி பிரச்சனை இருப்பவர்கள் வரலட்சுமி விரதம் இருந்து வழிபடலாம்.
விவாகரத்து, நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லை என்பவர்கள் வரலட்சுமி விரதம் இருக்கலாம்.
உடல் சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள்,சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இருப்பவர்கள் வரலட்சுமி விரதம் இருந்து வழிபடலாம்.
இந்நாளில் அரிசி,துவரம் பருப்பு போன்ற பொருட்களை வாங்கி மகாலட்சுமி தயார் முன் வைத்து பூஜை செய்த பிறகு சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.அதேபோல் மஞ்சள்,உப்பு வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நெய்வேத்தியத்தை வைத்து பூஜை செய்து வழிபடலாம்.