Varalakshmi viratham: வரலட்சுமி விரதம் எப்படி இருக்க வேண்டும்!! இதை கடைப்பிடித்தால் செல்வ வளம் பெருகும்!!

0
162
Varalakshmi viratham: How Varalakshmi Vratham should be!! If you follow this, wealth will increase!!
Varalakshmi viratham: How Varalakshmi Vratham should be!! If you follow this, wealth will increase!!

Varalakshmi viratham: வரலட்சுமி விரதம் எப்படி இருக்க வேண்டும்!! இதை கடைப்பிடித்தால் செல்வ வளம் பெருகும்!!

செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் பெண் தெய்வமான லட்சுமிக்கு விரதம் இருந்து பூஜை செய்வததை தான் வரலட்சுமி விரதம்(நோம்பு) என்று கூறுகின்றோம்.இன்று(ஆகஸ்ட் 16) வரலட்சுமி விரத நாளில் பெண்கள் தங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து மாவிலை தோரணம்,பூ மாலை கொண்டு அலங்கரிப்பார்கள்.இந்நன்னாளில் விரதம் இருந்து வரலட்சுமி சிலைக்கு பூஜை செய்து வழிபட்டால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம்.

வரலட்சுமி விரதம் இருக்கும் முறை:

வரலட்சுமி விரதம் இருக்க நினைப்பவர்கள் வீட்டின் தென் கிழக்கு மூலையில் வெள்ளி வரலட்சுமி சிலை வைத்துக் கொள்ளவும்.வெள்ளி சிலை இல்லாதவர்கள் வரலட்சுமி திருவுருவ படம் அல்லது ஸ்டிக்கரை சுவற்றில் மாட்டி வைக்கலாம்.

அதற்கு முன்னர் வீடு மற்றும் பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு
மாவிலை தோரணம்,பூ,மாலை கொண்டு இல்லத்தை அலங்கரிக்க வேண்டும்.நீங்கள் வரலட்சுமி பூஜை செய்யும் மண்டபத்தின்’இருபுறமும் வாழை மரத்தை கட்டினால் சிறப்பு.
அதன் பின்னர் ஒரு கலசத்தில் அரிசி நிரப்பி அதனை சுற்றி மாவிலை வைக்கவும்.பிறகு ஒரு அதன் மேல் வைத்து மஞ்சள் குங்குமம் இடவும்.வரலட்சுமி நோம்பு அன்று இந்த விஷயங்களை செய்வது கடினம்.ஆகவே வரலட்சுமி விரதம் இருப்பதற்கு முன்னர் இந்த வேலைகளை செய்து முடிப்பது நல்லது.

வரலட்சுமி விரதம்

அதிகாலை நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு வரலட்சுமி விரத பூஜையை ஆரமிக்க வேண்டும். முதலில் 5 முக விளக்கேற்றவும்.பிறகு அம்மனுக்கு உகந்த நெய்வேத்தியம் படைக்கவும்.அதன் பின்னர் அம்மனுக்கு மலர் தூவி மந்திரங்கள் கூறி வழிபட வேண்டும்.காலையில் பூஜை செய்தது போன்று மீண்டும் மாலையில் வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.இந்த பூஜைக்கு பயன்படுத்திய பொருட்களை பிரசாதமாக உண்ணலாம்.ஒருவேளை வரலட்சுமி நோம்பு அன்று விரதம் இருக்க முடியாத பெண்கள் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை நாளில் வரலட்சுமி நோம்பு இருக்கலாம்.

Previous articleடெங்கு காய்ச்சலால் அவதியா.. இந்த இலையை அரைத்து குடித்தால் இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை பல மடங்குஅதிகரிக்கும்!!
Next articleஆண்களே இதையெல்லாம் செய்தால் ஆண் மலட்டுத்தன்மை வந்துவிடும்!! அதை கண்டுபிடிக்க எளிய வழி முறைகள் இதோ!!