தில்லி முதல்வருக்கு கொரோனா?

0
138

புது தில்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா பொது முடக்கம் அமல் படுத்தப்பட்ட நாள் முதல் தற்போது வரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், செய்தியாளர்கள் சந்திப்பு, ஆலோசனை கூட்டங்கள் அனைத்தும் காணொலி காட்சி மூலமாகவே முதல்வர் கெஜ்ரிவால் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக காய்ச்சல், இருமல் உள்ளிட்டவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து தன்னை தனிமைப் படுத்தி கொண்ட கெஜ்ரிவால் தனது சந்திப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் ரத்து செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. அது வரை மருத்து குழு அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை அவர் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமருத்துவ கட்டணம் கட்டாததால் முதியவரை படுக்கையில் கட்டி வைத்த மருத்துவமனை
Next articleசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு?