போராட்டத்தை வாபஸ் பெற்ற அண்ணாமலை! திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் பாஜக! 

0
615
Annamalai withdrew the protest! BJP wants to form an alliance with DMK!
Annamalai withdrew the protest! BJP wants to form an alliance with DMK!

போராட்டத்தை வாபஸ் பெற்ற அண்ணாமலை!! திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் பாஜக!!

தமிழக அரசுக்கு எதிராக நடத்தப்படவிருந்த அத்திக்கடவு அவினாசி திட்டம் தொடர்பான போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தற்பொழுது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் முன்பு இல்லாத வகையில் தற்பொழுது பாஜக கட்சி திமுக மற்றும் அதிமுக கட்சிக்கு மாற்றுக் கட்சியாக வளர்ந்து வருகின்றது. தமிழகத்தில் வெற்றி பற வேண்டும் என்றால் பாஜக கட்சியானது தமிழகத்தில் இரண்டு தூண்களாக இருக்கும் அதிமுக அல்லது திமுக இரண்டில் எதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும்.

அந்த வகையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து கடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்த பாஜக கட்சி தமிழகத்தில் 4 இடங்களை கைப்பற்றியது. அந்த வகையில் அதிமுக கட்சியின் கோரிக்கைகளை செவி கொடுக்கவில்லை என்று கூறி அதிமுக கட்சி பாஜக கட்சியின் கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கட்சி படுதோல்வியை சந்தித்தது. பாஜக கட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்த நிலையில் தற்பொழுது பாஜக கட்சியின் பட்டம் திமுக பக்கம் திரும்பி இருக்கின்றது.

எப்படியாவது திமுக கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பாஜக செயல்பட்டு வரும் நிலையில் திமுக கட்சியும் பாஜக கட்சியின் வலைக்குள் சிக்கி இருக்கின்றது என்பதை சமீபத்திய நிகழ்வுகள் தெளிவாக காட்டுகின்றது. திமுக கட்சிக்கும் பாஜக கட்சிக்கும் இடையே இருக்கும் இந்த நெருக்கம் நலத் திட்டங்களை பெறுவதற்கான வியூகமாக இருக்குமோ அல்லது புதியதொரு கூட்டணிக்கான தொடக்கமாக இருக்குமோ என்பதை பொறுத்திருத்து பார்க்க வேண்டும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் பாஜக கட்சியின் பெயரை கூட தெரியாத நிலையில் தற்பொழுது சிறிய கிராமங்களில் கூட பாஜக பெயர் தெரியும் அளவிற்கு தமிழகத்தில் பாஜக கட்சி அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் பாஜக நுழைய வேண்டும் என்றால் முன்பு கூறியது போல ஒன்று திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் அல்லது அதிமுக கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும்.

ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலை வைத்து பார்க்கும் பொழுது இதில் ஒன்று உறுதியாக தெரிகின்றது. அதாவது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமையப் பொது இல்லை என்பது உறுதியாக தெரிகின்றது. இதையடுத்து பாஜக கட்சியின் பார்வை எதிரிக் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள திமுக பக்கம் திரும்பியுள்ளது.

இதை நிரூபிக்கும் விதமாக கடந்த சில வாரங்களாக திமுக மற்றும் பாஜக கட்சிக்கு மத்தியில் மோதல்களும் எதிர்ப்புகளும் குறைந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பாஜக கட்சியின் ஆதரவாளர் என்று கருதப்படும் தமிழக அரசின் மூத்த அதிகாரி எஸ்.கே பிரபாகர் அவர்களை திமுக தலைமையிலான தமிழக அரசானது டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமித்தது.

இதே போல சுதந்திர தினமான நேற்று(ஆகஸ்ட்15) ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள திமுக கட்சியின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் மறுப்பு தெரிவித்து கலந்து கொள்ளாமல் போக தமிழக அரசு சார்பாக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களும் தமிழக அமைச்சர்களும் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

இந்த தேநீர் விருந்தில் முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் பாஜக நிர்வாகிகளுடனும் ஆளுநருடனும் பேச திமுக கட்சியின் மூத்த தலைவர் எ.வ வேலு அவர்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் கையை பிடித்து பேசினார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை அவர்கள் எதை எதிர்க்க வேண்டுமோ அதை எதிர்ப்போம். எதை ஆதரிக்க வேண்டுமோ அதற்கு ஆதரவு தருவோம் என்று கூறினார்.

அது மட்டுமில்லாமல் மற்றொரு நிகழ்வும் நடந்துள்ளது. அதாவது திமுக கட்சியின் தலைவர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சி வருமாறு அண்ணாமலைக்கு முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களே போன் மூலமாக அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து கூறிய அண்ணாமலை அவர்கள் “என்னை முதல்வர் தொடர்பு கொண்டு கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை வெளியாகும் விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். நானும் கலைஞர் கருணாநிதி அவர்களின் சாதனைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். நான் வருகிறேன் என்று முதல்வரிடம் கூறினேன்” என தெரிவித்திருந்தார்.

இவ்வாறு திமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு மத்தியிலான மோதல்கள் குறைந்து வரும் நிலையில் அத்திக் கடவு அவிநாசி திட்டம் தொடர்பாக நடத்தப்படவிருந்த போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அண்ணாமலை அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் “ஒரு வழியாக, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை ஆகஸ்ட் 17 அன்று, தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆட்சிக்கு வந்து கடந்த 39 மாதங்களாக, பொதுமக்கள் மற்றும் விவசாயப் பெருமக்கள் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் காலதாமதமாக்கிக் கொண்டிருந்த திமுக அரசு, ஆகஸ்ட் 20 முதல், தமிழக பாஜக சார்பாக, தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததை அடுத்துப் பணிந்திருக்கிறது. பொதுமக்களின் 70 ஆண்டு காலக் கனவு, தமிழக பாஜகவின் வலியுறுத்தலின் பேரில் நிறைவேறவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திமுக அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் மூலம், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான நீர்நிலைகள், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பலனடைவதோடு, லட்சக்கணக்கான பொதுமக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். கடந்த 39 மாதங்களாகத் தாமதப்படுத்தியதற்கு, பொதுமக்களிடம் வருத்தம் தெரிவிக்கத் திமுக அரசு கடமைப்பட்டுள்ளது என்பதையும், இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மேலும், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்காக, குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீடு நிதி இதுவரையிலும் வழங்கவில்லை. அவர்களுக்கான இழப்பீடு, திட்டத்தின் தொடக்க விழா அன்றே அறிவிக்கப்பட வேண்டும். ஏற்கனவே இழப்பீடு வழங்கப்படாமல், பல ஆண்டுகள் காலதாமதமாகியிருக்கிறது. திட்டம் நிறைவேறுவது, அவர்களுக்கு ஒரு புறம் மகிழ்ச்சியளித்தாலும், அவர்களுக்கான இழப்பீடும் வழங்கப்படுவதே, அந்த மகிழ்ச்சியை முழுமையானதாக்கும். எனவே, குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீடும், உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அது மட்டுமின்றி, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2021 ஆம் ஆண்டு கொண்டு வந்த தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம், ஒவ்வொரு மாநிலமும், அணைகள் பாதுகாப்புக் குழுவை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. தமிழகத்தில்,  பவானிசாகர், ஆழியாறு, திருமூர்த்தி அணை, அமராவதி அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள், போதிய பராமரிப்பின்றி இருக்கின்றன.

அணைகளைப் பராமரிப்பதும், பாதுகாத்துக் கண்காணிப்பதும்தான் இந்தக் குழுவின் தலையாய பணி. ஆனால், தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் கடந்தும், திமுக அரசு, இதுவரை, தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்கவில்லை. இனியும் தாமதிக்காமல், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்க முதலமைச்சர் திரு. ஸ்டாலின் முன்வர வேண்டும். இதன் மூலம், தமிழக அணைகள் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

Previous articleஅரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி! அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.5000!!
Next articleவெட்கத்துடனே அதை செய்வராம்.. ஜெயலலிதாவால் அந்த பழக்கத்தை மட்டும் விடவே முடியவில்லையாம்!!