பெண்கள் உங்களின் Stress குறைய நெற்றியில் இப்படி பொட்டு வையுங்கள்!!

Photo of author

By Divya

திருமணமான இந்து பெண்கள் தங்கள் நெற்றிக்கு நடுவிலும்,வகிட்டிலும் குங்குமம் வைக்கிறார்கள்.குங்குமம் இட்டுக் கொள்வதால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

தெய்வீகத் தன்மை நிறைந்த குங்குமம் மருத்துவத் தன்மை உடையது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.தூய்மையான குங்குமத்தை நெற்றிக்கு நடுவில் வைப்பதால் நினைவாற்றல் அதிகமாகுமாம்.

நெற்றியில் குங்குமத்தை அழுத்தி வைத்தால் மூளையின் செயலாற்றல் அதிகமாகும்.பெண்களின் இரு புருவ பகுதியில் இருந்து எலக்ட்ரோ மேக்னடிஸம் என்ற மின்காந்த ஆற்றல் வெளியேறுகிறது.இந்நிலையில் இரு புருவங்களுக்கு இடையில் குங்குமத்தை இடுவதால் அவ்விடத்தில் குளிர்ச்சி ஏற்பட்டு நேர்மறையான எண்ணங்கள் அதிகமாகும்.நெற்றிக்கு நடுவில் மற்றும் நெற்றி வகுட்டில் குங்குமம் வைக்கும் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

நெற்றியில் குங்குமம் வைப்பதால் மன அழுத்தம் குறையும்.ஆண்களுக்கு இருபுருவங்களையும் இணைப்பது போன்று போட்டு வைத்தால் தன்னம்பிக்கை அதிகமாகும்.பெண்கள் ஆள்காட்டி விரலை பயன்படுத்தி குங்குமம் வைத்தால் நிர்வாக திறன் அதிகரிக்கும்.கட்டை விரல் பயன்படுத்தி குங்குமம் இட்டுக் கொண்டால் மன துணிச்சல் அதிகரிக்கும்.

சனி விரல் என்று அழைக்கப்படும் நடுவிரலை பயன்படுத்தி நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டால் ஆயுள் விருத்தி அதிகமாகும் என்பது ஐதீகம்.சுபத்தன்மை நிறைந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்வதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் உண்டாகும்.