சேலை கட்டும் பெண்களுக்கு கட்டாயம் கேன்சர் வருமாம்.. ஆராய்ச்சியில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

Photo of author

By Divya

சேலை கட்டும் பெண்களுக்கு கட்டாயம் கேன்சர் வருமாம்.. ஆராய்ச்சியில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

இன்றைய மாடன் உலகில் பெண்கள் புது புது டிசைனில் ஆடைகள் உடுத்தினாலும் சேலையில் அவர்களின் அழகு இன்னும் கூடத் தான் செய்கிறது.நம் இந்தியாவில் பெண்கள் சேலை அணிவது கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது.நகர் புறங்களில் மாடன் உடைகள் அணியும் நாகரிகம் வளர்ந்தாலும் கிராம புறங்களில் சேலை அணியும் பழக்கத்தை இன்றுவரை பெண்கள் பின்பற்றி வருகின்றனர்.வீட்டு விசேஷங்கள்,சுப நிகழ்ச்சிகளில் பட்டு புடவை அணிவதையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.சேலை அணியும் கலாச்சாரத்தால் இந்திய பெண்கள் அழகாகவும்,வலிமையுடனும் காட்சியளிக்கின்றனர்.

சேலை பிடிக்காது என்று சொல்லும் பெண்கள் கூட ஒருமுறை அதை அணிந்தால் அதன் மீது ஈர்ப்புக் கொள்வர்.ஆனால் சேலை கட்டுவது நாகரிகம் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் அது குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது.

தினமும் சேலை கட்டும் பெண்களுக்கு கேன்சர் ஏற்படும் என்ற தகவலை இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் தெரிவித்திருக்கிறது.இது சேலை கேன்சர் என்று அழைக்கப்படுகிறது.சேலை கட்டும் பெண்கள் செய்கின்ற சில தவறால் இந்த புற்றுநோய் ஏற்படுகிறது.

சேலை அணியும் பெண்கள் உள்பாவாடையை இறுக்கி கட்டுவதால் இடுப்பு பகுதியில் எரிச்சல் ஏற்பட்டு அவ்விடத்தில் தோலின் நிறம் மாறுகிறது.பெரும்பாலான பெண்கள் இந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.உள்ளாடையை இறுக்கமாக அணிவதால் அவ்விடத்தில் அதிக அழுத்தம் ஏற்பட்டு நாளடைவில் புற்றுநோய் கட்டிகள் உருவாகிவிடுகிறது.

இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.அது மட்டுமின்றி சேலை அணியும் பெண்கள் உள்பாவாடையை இறுக்கமாக கட்டுவதை தவிர்க்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.