TVK: விஜய்யின் தவெக கட்சி கொடி அறிமுகம்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!! 

TVK: பனையூர் அலுவலகத்தில் தவெக கட்சி கொடி அறிமுகம் செய்யும் ஒத்திகை நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் கடந்த மாதம் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து கல்வி விழா ஒன்றை நடத்தினார். அரசியல் பயணத்தில் அவரது அடுத்தக் கட்ட நகர்வாக மாநாடு நடத்துவது தான் உள்ளது. இதற்கு முன்பாக கட்சி கொடி அறிமுக விழா நடத்தப்போவதாக தகவல்கள் வெளியானது. மேலும் இது ரீதியாக 3 கொடி வடிவமைக்கப் பட்டதாகவும் குறிப்பாக அதில் வாகை பூ அச்சடிக்கப்படதாகவும் கூறினர்.

மேற்கொண்டு வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி கட்சி கொடியை விஜய் அவர்கள் அறிமுகம் செய்யப்போவதாகவும் அதற்கான பணிகள் பனையூர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி தொகுதி வாரியாக அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பனையூர் அலுவலகத்தில் கட்சி கொடி அறிமுக விழாவிற்காக முன் ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. இதில் விஜய் படம் பொறித்த மஞ்சள் நிற கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.