இ-பான் கார்டு வேண்டுமா? ஜஸ்ட் 2 மினிட்ஸில் இதை டவுன்லோடு செய்திடலாம்!!

0
147
Want an e-PAN card? You can download it in just 2 minutes!!
Want an e-PAN card? You can download it in just 2 minutes!!

இந்தியாவில் நிரந்தர கணக்கு எண் என்று அழைக்கப்படும் ஆதாருக்கு அடுத்து முக்கிய அடையாள ஆவணமாக பான் கார்டு திகழ்கிறது.வருமான வரி செலுத்த,நிதி பரிவர்த்தனை மேற்கொள்ள,அதிகளவு நகை வாங்க பான் கார்டு முக்கிய ஆவணமாக இருக்கின்றது.இந்த பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் உங்கள் கைக்கு வந்து சேர இரண்டு முதல் 4 வாரங்கள் வரை என்பதால் அவசர தேவைக்கு இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.இந்த டிஜிட்டல் பான் கார்டை பெற ஆதார் அட்டை மட்டும் இருந்தால் போதும்.

இ-பான் அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஸ்டெப் 01:

முதலில் PAN-ன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.அதன் பின்னர் இடது பக்கத்தில் இருக்கின்ற ‘Instant E-PAN’ என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 02:

அடுத்து புதிய PAN எண்ணைப் பெறுவதற்கான விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 03:

பிறகு தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்து தொடரவும் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 04:

அடுத்து ஆதாரில் பதிவாகி இருக்கும் மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை என்டர் செய்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 05:

பிறகு அனைத்து விதிமுறைகளையும் ஏற்று தேர்வுப்பெட்டியில் டிக் செய்யவும்.இவ்வாறு செய்த உடன் டிஜிட்டல் பான் கார்டு திரையில் தோன்றும்.அதை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.இந்த டிஜிட்டல் பான் அட்டையை நிதி பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தலாம்.நீங்கள் ஏற்கனவே ஆதார் கார்டு வைத்திருந்தால் அதில் இருக்கின்ற விபரங்களை சரி செய்ய ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

Previous articleஆண்களே நீங்களும் சுய உதவிக் குழு தொடங்கலாம்.. வட்டியின்றி ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்!!
Next articleஆதார் அட்டை குறித்து முக்கிய அறிவிப்பு.. இது தான் கடைசி தேதி!! உடனே இதை செய்திடுங்கள்!!