TVK: தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்ப்பதற்காகவே பாஜக மற்றும் திமுக கூட்டணி வைக்கப்போவதாக அதிமுக எம் எல் ஏ தெரிவித்துள்ளார்.
நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் நாளை மறுநாள் தனது கட்சிக்கொடியை அறிமுகம் செய்யப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனின் ஒத்திகையானது நேற்று பனையூரில் இருக்கும் அவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் வீடியோவும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தகது. இவ்வாறு இருக்கையில் கலைஞர் நூற்றாண்டு விழா முடிந்ததிலிருந்து பாஜக மற்றும் திமுகவிற்கு ரகசிய தொடர்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி அவர்களும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்து திமுகவை முற்றிலும் எதிர்த்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, “கல்வி விருது” வழங்கும் விழாவில் கூட திமுகவை சுட்டிக்காட்டி விஜய் பேசி இருப்பதை பார்க்க முடிந்தது. தற்பொழுது திமுக மற்றும் பாஜக உறவு வைப்பதற்கு முக்கிய காரணம் தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்க்க தான் என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
நேற்று மதுரையில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில், கட்டாயம் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து விஜய்க்கு எதிராக ஐடி ரைட் நடக்க வழி வகை செய்யும். இந்தியா கூட்டணிக்கு முக்கிய காரணம் திமுக தான் என்று கூறிவிட்டு தற்பொழுது எப்படி பாஜகவுடன் கூட்டணி சேர ஸ்டாலின் முயற்சிக்கிறார். இவர்கள் கூட்டணி குறித்து நாடு அறிந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.