ARMSTRONG: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கில் கொலையாளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களின் மனைவி மோனிஷா அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பெரம்பூரில் உள்ள அவருடைய இல்லம் அருகே கடந்த ஜூலை 5ம் தேதி மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்தியா அளவில் பேசு பொருளாக மாறியது.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் பலரும் அவருடைய படுகொலைக்கு கண்டனங்களை தெரிவித்தனர். இதையடுத்து அப்போது சென்னை ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் மாற்றப்பட்டு புதிய ஆணையராக அருண் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து புதிய ஆணையராக பதவியேற்ற அருண் அவர்கள் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு காரணமானவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் இது வரை 24 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் மூலமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
திமுக, அதிமுக, பாஜக கட்சிகளை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் அவர்களையும் காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகின்றது. இந்நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களின் மனைவிக்கும் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கில் சம்பந்தம் இருப்பதாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றது.
அதாவது ரவுடி சாம்போ செந்தில் அவர்களின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் அவர்களுக்கு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களின் மனைவி மோனிஷா அவர்கள் அடைக்கலம் கொடுத்திருப்பாரோ என்ற சந்தேகத்தில் காவல் துறையினர் மோனிஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதாவது குற்றவாளியான மொட்டை கிருஷ்ணன் அவர்களுடன் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களின் மனைவி மோனிஷா அவர்கள் அடிக்கடி பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளாராம். இந்த சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் புதுப்பேட்டையில் இருக்கும் காவல் குடியிருப்பு வளாகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தார். இவருக்கும் சில ரவுடிகளுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூரை சேர்ந்த அம்பேத்கர் சட்டக் கல்லூரியை சேர்ந்த மாணவர் ஆவார்.
ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்று கவுன்சிலராக ஆனார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகவும் மாறினார். கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற சட்டக்கல்லூரி மோதல் வழக்கில் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பின்னர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.