புதிதாக ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்த சுமார் 3 லட்சம் குடும்பங்களில் தகுதியானவர்களுக்கு இன்னும் ஒரு சில வாரங்களில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தற்பொழுது தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கின்றது. அதே போல தமிழகத்தில் 26502 முழு நேர ரேஷன் கடைகளும் 10452 பகுதி நேர ரேஷன் கடைகளும் இருக்கின்றது. இதன் மூலமாக மக்கள் ஸ்மார்ட் கார்டுகளை வைத்து ரேஷன் கடைகள் மூலமாக பொருட்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் பயன்படுத்தப்படுவது இல்லை. இந்த ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் பல வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பிடச் சான்றிதழ் வாங்குவதற்கும், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கும், சாதிச் சான்றிதழ் வாங்குவதற்கும், மருத்துவக் காப்பீடு பெறுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அதே போல தமிழக அரசு தற்பொழுது செயல்படுத்தியுள்ள கலைஞர். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் 1000 பெறுவதற்கு விண்ணப்பிக்கவும் ரேஷன் ஸ்மார்ட் கார்டு மிகவும் முக்கியமான ஒன்று. எனவே மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் ரேஷன் ஸ்மார்ட் கார்டு முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது.
கட்ந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் புது ரேஷன் ஸ்மார்ட் கார்டு கேட்டு விண்ணப்பித்த நபர்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு புது ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புது ரேஷன் ஸ்மார்ட் கார்டு வேண்டி விண்ணப்பித்து ஒன்றரை வருடமாக மூன்று லட்சத்திற்கும் மேலான விண்ணப்பதாரர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் பல வகைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ரேஷன் ஸ்மார்ட் கார்டு தற்பொழுது செயல்பாட்டில் இருந்து வரும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முக்கியமான ஆதாரமாக இருந்து வருகின்றது. ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக விண்ணப்பிக்காமல் தற்பொழுது மகளிர் உரிமைத் தொகை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே லட்சக் கணக்கான மக்கள் புது ஸ்மார்ட் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
புது ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணியை தொடங்குவதற்குள் நாடாளுமன்ற தேர்தல் வந்த நிலையில் தேர்தல் முடிந்த பின்னர் புது ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்டதற்கு மாறாக இன்னும் புது ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படாமல் இருப்பதால் மக்கள் அரசின் நலத்திட்டங்களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக புது ஸ்மார்ட் கார்டுகளுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து தற்பொழுது தமிழக அரசு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு சார்பில் புது ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு 2.80 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இதில் தகுதியான நபர்களை கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இன்னும் ஒரு சில வாரங்களில் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.