நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்க கடந்த 2016 ஆம் ஆண்டு உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இத்திட்டம் பேருதவியாக இருந்து வருகிறது.இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர் 18 வயது நிரம்பிய பெண்ணாக இருக்க வேண்டும்.அது மட்டுமின்றி அவர் இந்தியாவில் வசிக்க கூடியவராக இருக்க வேண்டும்.இதுவரை எரிவாயு இணைப்பு பெறாதவர்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
குடும்ப ஆண்டு வருமானம் 1,00,000 ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும்.நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.2,00,000க்கு கீழ் இருக்க வேண்டும்.
உஜ்வலா திட்டத்திற்கு தேவைப்படும் ஆவணங்கள்:
1)ஆதார் அட்டை
2)வயதுச் சான்றிதழ்
3)வருமானச் சான்றிதழ்
4)ரேஷன் கார்டு
5)வங்கி கணக்கு புத்தகம்
6)தொலைபேசி எண்
7)பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் https://www.pmuy.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.அடுத்து “புதிய உஜ்வாலா 3.0 இணைப்புக்கு விண்ணப்பிக்கவும்” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
அடுத்து Indane, Bharat Gas,HP Gas உள்ளிட்ட கேஸ் நிறுவனத்தில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.நீங்கள் தேர்ந்தெடுத்த கேஸ் இணைப்பின் இணையதளத்திற்குச் செல்லவும்.
பிறகு உங்கள் மாநிலம் மற்றும் மாவட்டத்தைத் செலக்ட் செய்யவும்.அடுத்து உங்களுக்கு அருகில் இருக்கின்ற கேஸ் விநியோகஸ்தரைத் தேர்ந்தெடுக்கவும்.
அதன் பின்னர் உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை என்டர் செய்து சமர்ப்பிக்கவும்.பிறகு விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தேவையான ஆவணங்களை இணைத்து பதிவேற்றம் செய்யவும்.
அதன் பின்னர் விண்ணப்பத்தின் நகலை அருகிலுள்ள எரிவாயு நிறுவனத்தில் சமர்ப்பித்து இலவச கேஸ் இணைப்பை பெறவும்.